ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 ஒருவர் எனை வெண்பா கற்றுத்தரக்கேட்டபோது....

உற்ற அறிவோ உடுவளவு; நூலாய்ந்து
பெற்ற அறிவோ பிறையளவு; - அற்றமற
வெள்ளுவா போலொளி வீசுகவி நான்புகட்ட
உள்ளவா றாமோ உரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக