ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 7/6/2017 - பள்ளிகள் இயங்கத்தொடங்கிவிட்டன. - செய்தி -

உறாதன உற்றதுபோல் உச்சிவெயி லோடும்
புறாவென மேவிப் பொலிந்த - சிறாரெல்லாம்
இன்றைக்குப் பள்ளி இயங்கத் தொடங்கியதால்
சென்றங்குப் பட்டார் சிறை!
இயற்கை வழங்கும் இயற்கல்வி நீக்கிச்
செயற்கை முறையில் திணிக்க - வியந்ததைப்
பெற்றோரும் தம்பிள்ளை பெற்றிடல் நன்றென்று
நிற்பார் வரிசையில் நீண்டு!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Senthil Kumar, பாவலர் அபி சத்தி மற்றும் 11 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக