பாழ்செய்யும் அந்தப் பருவரல் நீக்கிட
ஆழ்ந்தூடித் தேடி அழிக்கும் அருமருந்தைத்
தேக்கிக் கணினியைத் தெம்பூட்ட இன்றேநீ
ஆக்கப் பணிசெய்வாய் ஆங்கு!
(தன் கணிப்பொறியில் வைரஸ் பரவி விட்டதாக நண்பர் என்னிடம் உரைத்தபோது எழுதிய வெண்பா)
பருவரல் -துன்பம் (இங்கு இச்சொல் வைரஸைக் குறித்து நிற்கிறது)
அருமருந்து -வைரஸை நீக்கும் ஆண்டி வைரஸைக் குறிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக