புதன், 5 பிப்ரவரி, 2025

 நான்!

துன்பங்கள் யார்படினும்
துடிக்கின்றவன்; - பிறர்
கண்ணீரைக் கவிதையாய்
வடிக்கின்றவன்!
கொடுமைகட் கறம்பாடி
முடிக்கின்றவன்; - அதன்
குரல்வளை நெரித்துயிர்
குடிக்கின்றவன்!
வன்முறை யார்செயினும்
வெடிக்கின்றவன்; - அந்தப்
புன்முறை போய்மாளப்
பொடிக்கின்றவன்!
பெயருக்கா எழுதுகோல்
பிடிக்கின்றவன்? - என்றன்
எழுத்தாலே இனப்பகை
இடிக்கின்றவன்!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Melappalayam S. Mani, Siva Raman Sreeramsiva மற்றும் 3 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக