டிசம்பர் 1 ம் நாள் நடுவன் அரசு பொன் உச்ச வரம்பை அறிவித்த போது....
தனக்குநேர் இல்லாத தங்கமே! பாராய்!
உனக்குமோர் எல்லை உரைத்தார்; - கனக்கவே
அள்ளி அணிந்த பெருஞ்செல்வர் பெண்டெல்லாம்
உள்ளம் பதைத்தார் உலைந்து!
கோழி விரட்டக் குழையெறிந்த அந்நாளை
'வாழி' எனநான் வழுத்துவேன்; - ஊழி*யில்
பொன்னே பெரிதெனப் போற்றினார் மீதிறங்கிற்(று)
என்னே பெரிய இடி!
எல்லா உணர்ச்சிகளும்:
3Siva Raman Sreeramsiva மற்றும் 2 பேர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக