சனி, 1 பிப்ரவரி, 2025

 நெஞ்சிற்குரைத்தல்:-

வாயைக் கொடுக்கிறதோர்
வானரம்; நாமந்தப்
பேயை விரட்டுவதே
பேரறம்; - நாயைப்போல்
நாமும் குரைப்பது
நல்லார்க் கழகிலையே;
ஏமுறுதல் ஞாயிறுக்கு
ஏது?
நாயாய்க் குரைத்தாலும்
நாற்கல் லெறிந்தாலும்
வாயால் மலமிருந்து
வார்த்தாலும் - ஓயாமல்
ஊளையே இட்டாலும்
ஒள்ளொளி சிந்துகிற
காலைக் கதிர்க்கில்லை
காழ்ப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக