அடியும் முடியும்!
இல்வாழ்க்கைக் கில்லாள் இசையாவாள்; இல்லாளற்(று)
இல்வாழ்வார்க் கில்வாழ்க்கை இல்!
பிடியாய் முனையைப் பிடிப்பரோ? வாளின்
பிடியாம் தமிழைப் பிடி!
தாய்க்குப் பிறத்தல் தரணிவழக் காம்நூலே
சேய்க்குப் பிறக்கும்நற் றாய்!
முடியும்; முயன்றால் முடியும்; முயன்றே
முடியோ டடியை முடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக