சனி, 1 பிப்ரவரி, 2025

 செத்தான்டா சேகர்!

சந்தனக் கிண்ணத்தாள்
சாய்ங்கால வண்ணத்தாள்
சந்தைக் கொருநாள்
தனித்துவந்தாள் - வந்தவள்
பார்வையை ஓட்டிப்
பலகடைகள் பார்வையிட்டாள்;
பார்வைநிலாக் காய்ச்சிய
பாகு! (1)
கடைகள் பலவும்
கண்ணுற்ற பாவைக்
கடைக்கண் கடையொன்றைக்
காணக் - குடைபோலும்
ரெக்கை களைவிரித்து
ரீங்காரம் இட்டகிளிப்
பக்கம்போய் நின்றனள்
பாய்ந்து! (2)
கூண்டுக் கிளியதன்
கொஞ்சு மொழிதனது
நீண்டவிழிப் பெண்மக்கள்
நேசத்தைத் - தூண்டுமெனக்
கேட்ட விலைதருவேன்
கேளென்றாள்; கேட்டமொழி
மீட்டுகிற வீணைக்கு
மேல்! (3)
விற்பவன் சொன்னான்,
‘விலைமகள் வீட்டிலே
பற்பல நாள்வாழ்ந்த
பஞ்சவர்ணம்; - முற்றிலும்
கொச்சைமொழி பேசும்
கொடுஐம் பது’வென்றான்
கச்சைப்பூ நீட்டினாள்
காசு! (4)
பச்சையாய்ப் பேசிடுமோ
பஞ்சவர்ணம் வாய்திறந்து
கொச்சையாய் ஏதேனும்
கூறிடுமோ? - அச்சத்தில்
முற்றத்தில் தொங்கவிட்டாள்
மொய்குழலாள்; கிள்ளைசொல்லும்
‘புத்தாள்;இவ் வீடும்
புதிது!’ (5)
நெஞ்சுக்குள் சந்தோசம்
நேரிழைக்குப் பெண்க(ள்)மணி
அஞ்சுக்குள் வீட்டை
அடையக்கண் – டஞ்சுகமும்,
‘வீட்டாள் புதிதவள்
வீடு புதிதிரண்டு
கூட்டாள் புதிதெ’ன்னும்
கூர்ந்து! (6)
கொஞ்சமாய்ச் சங்கடம்
கோதையர்க்கு மேலிடும்;
தஞ்சத்தால் தப்பியது
தத்தையும் - வஞ்சியர்
வாய்விட்டுப் புன்னகைத்து
வாசல் எதிர்பார்த்துப்
பாய்போட் டமர்ந்தார்
பறந்து! (7)
வேலைக்குச் சென்றவன்
வீடு திரும்பினான்
மாலையில் மூத்தாள்
மணவாளன்; - வாலைகளும்
தொத்தினார் தோள்களில்;
தொத்துவதைக் கண்டகிளி
கத்துச்சாம் 'ஹாய்!ஹாய்!சே
கர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக