புதன், 5 பிப்ரவரி, 2025

 ஆயிரம் உரூபாய்...

தோற்றம்:- நவம்பர் 2000
மறைவு:- நவம்பர் 8 -2016
வயதோ பதினாறு; மையலெழும் தோற்றம்;
இயலோ எனில்இயல் ஈர்தல்; -அயகோ!
உயக்கம் அளித்தும் உறவை முறித்தும்
இயக்கம் நிறுத்திற்(று) இறந்து!
சொற்பொருள்:-
இயல் - தன்மை, குணம்.
ஈர்தல் - அறுத்தல்.
உயக்கம் - வருத்தம்.
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக