நெஞ்சொடு கிளத்தல்...!
இதந்தருந் தென்றல் இரவுகள் நாளும்
வதம்புரிந் துன்னை வருத்த - மதன்கணை
பாய்ந்தது போதும்; பலகால் தனிமையில்நீ
தேமலர்க் கண்ணாள் தெவிட்டாத இன்பத்தைச்
சாமத்தில் வைத்துனக்குத் தந்திடுவாள்; - காமனம்பு
கூற்றுக்கும் சேர்த்துக் கொலைசெய்த காலம்போய்
நேற்றுக்கும் சேர்த்து நிதம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக