சனி, 1 பிப்ரவரி, 2025

 ஏரோட்டம் வயல்வெளியில் மீன்கள் போடும்

எதிரோட்டம் நீர்நிலையில் அலங்க ரித்த

தேரோட்டம் பண்டிகையில் புலன்கள் போடும்
தினவோட்டம் பஞ்சனையில் தளைபொ ருந்தும்
சீரோட்டம் செய்யுள்களில் கலக லப்புச்
சிரிப்போட்டம் வாய்வழியில் கருத்த மேகக்
காரோட்டம் வான்வெளியில் அஜித்கு மார்தன்
'கார்'ஓட்டம் எமிரேட்ஸில் களித்தேன் கண்டே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக