ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 தமிழ்! (1)

ஓர்ந்திடல் வேண்டும்;நம் ஒண்டமிழ் அன்னையைச்
சேர்ந்திரல் யாண்டுஞ் சிறப்பு!
விளக்கம் :-
ஒப்புயர்வில்லாத்தமிழாமன்னையைச்சேர்ந்திருத்தல் எக்காலத்திலும் சிறப்பேயென்பதை உணர்ந்திடுதல் வேண்டும்.

தமிழ்! (2)
விண்ணுலவும் வெங்கதிராம் வெல்தமிழ்; மற்றெலாம்
தண்ணிலவின் தன்மை யுடைத்து!
விளக்கம்:-
ஒளியைக்கடன்பெற்று உலகிற்களிக்காத தான்தோன்றியாகும் கதிரவன். அக்கதிரவன்போன்றே தான்தோன்றித்தன்மைவாய்ந்தது தமிழ்மொழியாகும். மற்றமொழிகலெல்லாம் கதிரவனிடத்தில் ஒளிபெற்று ஒளிர்ந்தும், கடன்பெறவியலாக்கால் தேய்ந்துமறைந்தும் வானுலவும் நிலவைப்போன்றதாகும்.

தமிழ்! (3)
தின்றா லினிக்குஞ் செழுங்கன்னல்; இன்றமிழைச்
சொன்னாற் செவிக்குஞ் சுவை!
விளக்கம்:-
செறிந்தயினிப்பையுடைய கரும்பை, தின்றவர்மட்டுமே அதன் இன்சுவையையுணரமுடியும். கரும்பைப்போன்று இனிமையுடையது தமிழாயினும் அக்கரும்பினின்று மாறுபட்டதுதமிழ். இனியதமிழைப்பேசுவோர் மட்டுமல்ல, அத்தமிழைக்கேட்போர் செவிகளும் இனிக்கச்செய்யும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக