ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 உளறல்!

உளறல் எனுமோர் உயர்தமிழ்ச் சொல்லுக்(கு)
உளநற் பொருளும் உரைக்கின் - குளறல்;
உதவாக் குழறல்; உரைதடு மாறல்;
பிதற்றல் எனலாம் பெரிது!
கட்டித் தழுவிநாற் கால்சேர யாக்கையிரண்(டு)
ஒட்டி உறவாடி உய்கையில் - மெட்டி
தளர்ந்து தவித்துத் தளிர்க்கொடியாள் செப்பும்
உளறல் மொழிக்குண்டோ ஒப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக