கன்னெய் விலைதனைக் கண்ணாப்பிண் ணாவென
அன்றாடம் ஏற்ற அகங்கொண்டார்; - என்றென்றும்
உண்ணும் பொருளுக்(கு) உழவன் விலைவைக்க
எண்ணுங்கால் என்னாம் இகம்!
தானுயர வேண்டித் தனியார் நிறுவனத்தார்
வானுயரந் தான்விலை வைக்கின்றார்; - கோனும்
குடியின் குடிகெடுக்கும் கொள்கை முடிவை
மடியில் சுமக்கிறதே மற்று!!
எல்லா உணர்ச்சிகளும்:
4Senguttuvan Subramaniyam மற்றும் 3 பேர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக