சனி, 1 பிப்ரவரி, 2025

 சுடச்சுட பூரி சுட்டுச்

சுவைபட குருமா வைத்து
மடக்குவீர் கால்கள் என்று
மனைவியென் முன்னால் வைத்தாள்;
அட!இது பூரி தானா?
அம்புலி தானா? என்று
மடக்கிநான் கேட்ட தற்கு
மலரிதழ் பிதுக்க லானாள்!
மாவினால் இந்த மென்மை
வாய்த்திட வாய்ப்பே இல்லை;
பூவிரல் பிசைந்த தால்தான்
பூரிப்பே; எனினும் கூட
மேவிநெய்க் குளியல் போட்டு
மினுக்கிடும் கார ணத்தால்
தேவியே! ஒன்றே போதும்
தின்னஇடம் வயிற்றில் இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக