ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 சேர்ந்த இடந்தனைச்

செல்லாத காசாக்கல்
கூர்த்தமதி வைகோவின்
கோளாகும்; - பார்த்தன்று
நல்விஜய காந்தை
நசுக்கிச் செயல்தலையை
இல்லையென் றாக்கினார்
இன்று!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

 A.T. Varatharajan

புக்கும் மரணத்தைப் போய்வர வேற்றுகண்
சொக்குந்தூக் கத்தைச் சுவையாக்கித் -- துக்கக்
களையெடுக்கப் பற்றி கருகியே தொற்றி
விளையாடும் ஆறா விரல்.
ஊதுவதில் உள்ளம்
உவப்பவனே! ஏமனவன்
தூதுவனாம் வெண்சுருள்
தூக்கியெறி; - தீதுணர்ந்தும்
பற்றுவைக்கும் உன்னுள்
பலநாள் மறைந்திருந்து
புற்றுவைக்கு மன்றோ
புகை!!!
A.T. Varatharajan:-
பற்றி எரிந்துப் பழகும் பொழுதெல்லாம்
கற்றதினும் மேலோங்கும் கற்பனைகள் -- கற்றகவிக்
கோவாக்கும் செந்தமிழைக் கோர்த்தே அணிசேர்த்துப்
பாவாக்கும் இந்தப் புகை.
அகரம் அமுதன்:-
சட்டியில் உள்ளதுதான்
சட்டுவத்தில் என்றுணர்ந்து
விட்டொழிக்க வேண்டுமடா
வெண்சுருளை; - மட்டின்றிக்
கற்பனைகள் மேவுவதாய்க்
காதோரம் பூச்சுற்றல்
விற்பனனில் வேலையோ?
விள்!

 பெட்டைக்குப் போர்புரியப்

பேராவல்; நைந்தகூ
முட்டைக்குக் குஞ்சீன
மோகம்;நாய் - விட்டைக்குப்
பூசுணைப் பூசுமக்கப்
புந்தி; இவைநேராம்
கூசுதலில் லா'ரஜினி'
கூற்று!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

 ஊதுவதில் உள்ளம்

உவப்பவனே! ஏமனவன்
தூதுவனாம் வெண்சுருள்
தூக்கியெறி; - தீதுணர்ந்தும்
பற்றுவைக்கும் உன்னுள்
பலநாள் மறைந்திருந்து
புற்றுவைக்கு மன்றோ
புகை!?
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
1

 தமிழ்! (1)

ஓர்ந்திடல் வேண்டும்;நம் ஒண்டமிழ் அன்னையைச்
சேர்ந்திரல் யாண்டுஞ் சிறப்பு!
விளக்கம் :-
ஒப்புயர்வில்லாத்தமிழாமன்னையைச்சேர்ந்திருத்தல் எக்காலத்திலும் சிறப்பேயென்பதை உணர்ந்திடுதல் வேண்டும்.

தமிழ்! (2)
விண்ணுலவும் வெங்கதிராம் வெல்தமிழ்; மற்றெலாம்
தண்ணிலவின் தன்மை யுடைத்து!
விளக்கம்:-
ஒளியைக்கடன்பெற்று உலகிற்களிக்காத தான்தோன்றியாகும் கதிரவன். அக்கதிரவன்போன்றே தான்தோன்றித்தன்மைவாய்ந்தது தமிழ்மொழியாகும். மற்றமொழிகலெல்லாம் கதிரவனிடத்தில் ஒளிபெற்று ஒளிர்ந்தும், கடன்பெறவியலாக்கால் தேய்ந்துமறைந்தும் வானுலவும் நிலவைப்போன்றதாகும்.

தமிழ்! (3)
தின்றா லினிக்குஞ் செழுங்கன்னல்; இன்றமிழைச்
சொன்னாற் செவிக்குஞ் சுவை!
விளக்கம்:-
செறிந்தயினிப்பையுடைய கரும்பை, தின்றவர்மட்டுமே அதன் இன்சுவையையுணரமுடியும். கரும்பைப்போன்று இனிமையுடையது தமிழாயினும் அக்கரும்பினின்று மாறுபட்டதுதமிழ். இனியதமிழைப்பேசுவோர் மட்டுமல்ல, அத்தமிழைக்கேட்போர் செவிகளும் இனிக்கச்செய்யும்.


 எனக்கும் அண்ணன் விக்டர்தாஸ் அவர்களுக்கும் நிகழ்ந்த வெண்பா உரையாடல் :-

கூரார்ந்த நின்பார்வை
கூறும் பலசெய்தி;
ஏரார்ந்த உன்னையெவன்
ஏதலித்தான்? - சீரார்ந்த
தம்பியிடம் கூறாய்;
தருக்கன் தலைகொய்து
இம்மெனுமுன் தீர்ப்பேன்
இடர்!
-அகரம் அமுதன்
இடரென்று ஏதுமில்லை
ஏதலிக்க வில்லை
படர்ந்ததென்னில் சோகம்
பலவாய்-முடிவதற்கு
நானொன்றும் கானலில்லை
நானறிவேன் ஆனாலும்
வீணெனவே சாய்ந்தேன் விழுந்து.
-விக்டர்தாஸ்
வீழ்வதோ? அண்ணா!
விழிகள் விரக்தியில்
ஆழ்வதோ? செங்கதிர்
அம்புலியாய்த் - தேய்வதோ?
தன்விரல் தன்கண்ணைத்
தான்குத்த ஏகிடுமா?
அன்றன்று சொல்வேன்
அறிந்து!
-அகரம் அமுதன்
அறிந்தது நன்றே
அரிந்த(து) உறவு
முறிந்ததன்றோ அன்பென்னும்
மூளை-செறிந்த நம்
அன்பினைச் சொல்லுமே
ஆற்றலைச் சொல்லுமே
என்பினால் போர்த்த இயல்.
-விக்டர்தாஸ்
காதலால் இத்தனை
கலவரம்; மெய்யுற(வு)
ஆதலால் இத்தனை
அமலிகள்; - ஊடலால்
நெஞ்சங்கள் மென்மேல்
நெருங்க இராவெலாம்
மஞ்சத்தில் பூக்கும்
மகிழ்வு!
-அகரம் அமுதன்
மகிழ்வெங்கே போகும்
மனத்தினை விட்டு
அகழ்ந்து பல பாட்டெழுத
ஆசை-அகம் மட்டும்
ஆலைக் கரும்பானால்
ஆவதென்ன வாழ்வதென்ன
ஏழை என் செய்வேன் இனி.
-விக்டர்தாஸ்
இனிதேற் றுளியால்
இடிபடாப் பாறை
தனிச்சிலை யாகா
ததுகாண்; - நனிசேர்
கனிந்தசொல் போலன்றிக்
காயஞ் செயினும்
முனிந்தசொல் மேலாம்
முழங்கு!
-அகரம் அமுதன்
முழங்கத்தான் ஆசை
முகிழ்க்கத்தான் ஆசை
எழுதத்தான் ஆசை
எனினும்- அழவைக்கும்
சூழலில் சிக்குண்டால்
சூரியனும் தேயுமாம்
ஆழிநான் வற்றினேன் ஆழ்ந்து.
-விக்டர்தாஸ்
ஆழ்ந்தகன்று நிற்கும்
அறிவினாய்! துன்பமது
சூழ்ந்தகன்று நின்றால்
துவளுவதா? - வீழ்ந்தடித்துக்
கொள்ளுவதால் அஃது
குறைவதில்லை; மொட்டுவிடும்
தள்ளுவதால் இன்பத்
தளிர்!
-அகரம் அமுதன்.

 அண்ணன் விக்டர்தாஸ் அவர்களின், 'சக்தி எனத்தொடங்கி சிவம்' எனமுடியும் வெண்பாக்கள்கண்டு வாழ்த்தியொரு வெண்பா நான்செய்ததும் பதிலுக்கவர் ஒருவெண்பா செய்ததும்....

நான் :-
வெண்பா வடிவே!
விரசத் தமிழ்செய்யா
ஒண்பா விடிவே!
உனதரும் - பண்பாலென்
உள்ளங் கவர்ந்த
உயர்கவியே! உன்தமிழ்
வெள்ளங் கலந்தேன்
வியந்து!
அவர் :-
வெண்பா அரங்கில்
விளையாடும் வித்தகனே
அன்பால் புகழுகிறாய்
ஆகட்டும்-உன்பாவில்
உள்ளம் கரைந்தவன்நான்
உள்ளே உறைந்தவன்நான்
துள்ளுகிறேன் உன்அன்பைத்
துய்த்து.
எல்லா உணர்ச்சிகளும்:
பாவலர் வையவன்