சனி, 7 மார்ச், 2026

மோடி vs ட்ரம்ப்!

 

மோடி -

 

மேதகு ட்ரம்பார்க்கு! மெத்த நமஸ்காரம்;

வேதனையொன் றுண்டு விளம்பக்கேள்! – சோதனையாய்க்

கையிருப்புப் பெட்ரோல் கரைகிறது; மாற்றுவழி

பையிருப்பின் மன்னா! பகர்! 01

 

ட்ரம்ப் -

 

போரினிலே நானிருக்கும் போதினிலே உன்னிருகண்

நீரினிலே நீந்துவதை நிப்பாட்டு; – பாரினிலே

நின்போல் எனைக்கேட்டு நித்தம் பணிசெய்வார்க்(கு)

ஒன்றென்றால் என்னுதவி உண்டு! 02

 

மோடி -

 

அக்கத்தில் ரஷ்யா அகழ்ந்தெடுத்த கச்சாவைப்

க‍க்கத்தில் வைத்தபடி காத்துளது; – இக்கணமென்

நாட்டினது தேவைக்காய் நான்வாங்க உத்தரவு

கேட்டேன்; இடுவீர்தாக் கீது! 03

 

ட்ரம்ப் -

 

முப்பதுநாள் மட்டும் முறையான உத்தரவை

இப்பொழுது நானும் இடுகின்றேன்; – துப்புரவாய்

அப்புறம் வாங்க அனுமதி இல்லைநீ

குப்புறவீழ் தாலும் குளிர்ந்து! 04

 

மோடி –

 

வேட்ட வரம்தந்த வேந்தே! எனதரசின்

நாட்கள்உன் னாலே நகர்கிறது; – வாட்டும்உன்

காழ்மொழியும் கூட கனியே; கனல்வீசும்

பாழ்விழியும் கூட பனி! 05

 

ட்ரம்ப் -

 

மண்டை அனல்நான் மறந்து மகிழ்ந்திடவே

பண்டைப் புலவன்போல் பாட்டிசைத்தாய்; – தொண்டைக்குள்

ஊதாங் குழல்வைத்த உன்குரலால் ஆனந்தம்

பூதா கரமாச்சு போ! 06

 

மோடி –

 

அப்படியே காலையில்நான் ஆய்போக விண்ணப்பம்

இப்பொழுது வைத்தால் இசைவீரோ? – தொப்பையினி

வீங்கவழி இல்லா வெருட்டும் குசுநாற்றம்

தாங்கவழி இல்லா த‍தால்! 07

 

ட்ரம்ப் -

 

அக்மார்க் அடிமைநீ யானதனால் கேட்டபடி

தக்க அனுமதி தந்தேன்;உன் – ஒக்கலிலே

சேய்போல் எனது சினத்தைச் சும‍ப்பாயேல்

தாய்போல்காப் பேன்உந் தனை! 08





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக