திங்கள், 23 மார்ச், 2026

 

பச்சைக் கிளியைப் பவழமல்லி கைமொட்டை

வச்சிக் கடும்வேலை வாங்குவதா? - இச்சணமே

என்னோ டனுப்பிவை ஏய்!மாமா! தேவதையை

நன்றாய்க்காப் பாத்துகிறேன் நான்!

 

பெண்ணைச் சுமந்துபெற்றுப் பேரழகி யாய்வளர்த்து

மண்ணைச் சுமக்கவைக்கும் மாமாவே! - கண்டதும்என்

கண்களில் ரத்தம் கசியுதையா! பூவையின்கைப்

புண்களில் நீமருந்து போடு!

 

பாவம் இளவரசி; பாடாய்ப் படுகையில்

பாவலன்என் நெஞ்சம் பதறாதா? - காவலா!

ஆவலாய்க் கேட்டேன் அவளை எனக்களிப்பாய்

நாவளம் மிக்கவன் நான்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக