எலிகே சரிகிண்டும் என்மனைவி, இன்று
புலிகே சரிகிண்டிப் போட்டாள்; - நலிதீர
நாலு முறைவாங்கி நாந்தின்றும் என்வயிறு
காலும் நிறையலைமக் கா!
ஈச்ச மரமுள்ளால் ஈறுகுத்தி இன்னொருக்காக்
கூச்சம் அறத்தின்பேன் கூறுகட்டி; – வீச்சப்
புலாலுக்கே நெஞ்சில் புகலிடம் உண்டு;
ஹலால்நமக்கு ஒத்து வராது!
‘கேசரி நீபிடிச்சுக் கொண்டுவா’ கிண்டணும்நான்
கேசரி என்றவள்தான் கேட்டிருக்காள்; – ஆஞ்சரின்னு
நாளைக்கு வேட்டைக்கு நான்போறேன் மூனாறு
வேளைக்குத் தின்னஇடம் விட்டு!
பெயரெனக்குப் பூனை; வயிறெனக்குப் பானை;
முயன்றுரைப்பேன் நல்லெதுகை மோனை; – பயந்தெனக்கு
வெண்பா விலாச்சொறியும்; வெண்ணெய்
நிலாச்சொரியும்;
உண்பதற்கே போவேன் உலா!
பால்நெய் தயிர்காணும் பாயாசம் காணுமென்றென்
மேல்பழியப் போடும் விசனத்தால், – கால்விரிச்சு
மல்லாக்க நான்படுத்து விட்டத்தை பாக்குறது
பொல்லாப்பில் லாப்பொழுது போக்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக