சனி, 7 மார்ச், 2026


கல்லெறிந்தால் சேர்த்துக்
கடவுள் சிலைசெய்வேன்;
சொல்லெறிந்தால் பாடல்
தொடுத்திடுவேன்; - கல்சொல்லை
விட்டால் அவற்றை
விடவும் பெரிதுண்டா
விட்டெறிய உன்னிடத்தில்
வேறு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக