நானா படேகர்
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
வியாழன், 8 அக்டோபர், 2026
புதன், 16 செப்டம்பர், 2026
திங்கள், 14 செப்டம்பர், 2026
கடை உரிமையாளர் கூற்று
பிள்ளையார் செய்த பிரியாணி சாப்பிட்டால்
உள்ளபடி நோயெல்லாம் ஓடிவிடும்; – வெள்ளம்போல்
ஆனந்தம் உண்ணாகும்; ஆபத்து
நீங்கிவிடும்;
வானமுனக் காகும் வசம்!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துணும்வி நாயகர் – மேலும்
சதுர்த்திக்குச் சம்பா பிரியாணி தந்தார்
ஒதுக்காமல் நீகுந்தி உண்!
பக்தர்:-
ஒத்தப்பா! ஓரம் ஒதுங்கப்பா! இப்படியா
மத்தியில் நின்று வழிமறிப்பாய்? – மத்தவங்க
முந்திப்போய் சாமி முகம்காண வேண்டாமா?
நந்திபோல் நில்லாய்; நகர்!
முன்னாள் அமைச்சரெனில் மூலவர் ஓடிவந்து
தன்னாலே காட்சி தருவாரா? – பின்னால்போய்
மக்கள் வரிசையிலே வந்து தரிசனம்செய்;
அக்கப்போர் பண்ணா(து) அகல்!
சேகர் பாபு:-
வக்கத் தவனெல்லாம் வம்புக் கிழுத்திங்கு
நிக்காதே சீக்கிரம் நீங்குன்றான்; – சிக்கல்மேல்
சிக்கலைத் தாங்கி சிவனேன்னு நான்நின்றால்
நக்கலாச் சொல்றான், ‘நகர்!’
முன்னாள் அமைச்சென்றும் முன்கோபக் காரனென்றும்
சொன்னாலும் கூட சுருக்கென்று - பின்னால்
பிசாசைப்போல் வந்து பிராண்டிவிட் டென்னை
அசால்ட்டாச் சொல்றான், ‘அகல்!’
ஞாயிறு, 6 செப்டம்பர், 2026
அகரம் அமுதன்
பெண்பார்க்கப் போனாயே போவார்
வருவார்தம்
கண்பார்க்கு மாறுநற் கட்டழகோ
– நண்பா!உன்
எண்ணத்தில் அந்நேரம் ஏற்பட்ட
சிந்தனையை
வெண்பாவில் வைப்பாய் விரைந்து!
வரதன்
போதை விழிகண்டேன் பொற்கலைகள்
கட்டழகில்
பாதை மறந்தேன் பருவமகள்
–பேதையுளம்
மட்டும் புரியா மயக்கத்தில்
ஆழ்த்தியெனைச்
சுட்டாள் அதுவும் சுகம்!
அகரம்
அமுதன்
சுகப்போதை தந்து துயில்மறக்கப்
பண்ணி
அகத்தைக் களவாண் டவளின்
–தகவுரு
மாநிறமோ மால்நிறமோ மங்கை
இதழ்சுவைக்கத்
தேனுறுமோ சொல்க தெளிந்து!
வரதன்
தெரிந்த நிறமெல்லாம் தீயணைத்த
வண்ணம்;
புரியா துழல்கின்றேன் பொன்எண்ணம்
–அறிந்ததைச்
சொல்லத் துடிக்கின்ற சொர்க்கமகள்
கண்பார்த்து
அள்ளத் துடிக்கின்றேன் ஆம்!
2017
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026
10 ஆகஸ்ட் 2022
கள்கொட்டி நெய்த கவிதைகளை நானுனது
உள்பெட்டி சேர்க்கும் உளமில்லை; - நள்ளிரவு
வாதைகள் தீர்க்க வரவுமில்லை; சூதுடைய
கோதை உனதுறவு கோது!
கொஞ்ச வயசுமில்லை; கொஞ்சும்
பவிஷுமில்லை;
கொஞ்சம் கொழுப்பெனில் குற்றமில்லை; - அஞ்சுகமே!
மெத்தைக்கு நீபழசு; வித்தைக்கு
நீமவுசு;
சொத்தைக்கா நான்தருவேன் சொத்து!?
வயசப் படியுனக்கு வட்டமிடு கின்றாய்;
கயல்குதிக்கி றாய்பசுங் கன்றாய்; - முயல்குதித்து
ஆடை சரிகிறாய்; ஆளை அரிகிறாய்;
ஜாடையில் நீயும் சனி!
சிங்கப்பூர் இல்லைநீ; சீரான தொல்லைநீ;
ரங்கோலி இல்லைநீ; ராட்சஸிநீ; - வெங்காயத்
தோல்நீஉள் ளீடில்லாய்; சொல்லஓர்
பீடில்லாய்;
பால்நான் படுத்தாய் பழுது!
ஜிம்பாடி ஏதெனக்கு? செந்தமிழே
தோதெனக்கு;
லம்பாடி பெண்ணே! லடாய்எதற்கு? - எம்பாடு
நாளைக் கடப்பதற்கு; நானாய்
இருப்பதற்கு;
ஆளை விடுநீ யடி!
தோள்மாறி இங்குவந்த தோகையே! கைகலக்க
ஆள்மாறி இங்குவந்த ஆரணங்கே! - நாள்மாறும்
நான்மாற மாட்டேன்; நடைமீற மாட்டேன்;உன்
ஊன்பொதியை நீதூக்கி ஓடு!
இருந்துண்ணும் எண்ணம் எனக்கில்லை கட்டில்
விருந்துண்ண நீயழைக்க வேண்டாம்; - மருந்தெனினும்
உண்ணும் விருப்பமில்லை; உன்மேல்
வெறுப்புமில்லை;
கண்வளர்த்த காமம் கலை!
கல்மிஷம் இல்லாக் கவிஞன்நான்; என்னிடம்
சில்மிஷம் செய்யும் சிறுகரும்பே! -
பல்விஷம்
என்செய்யும் என்றா எடுத்தரவைக் கொஞ்சுவது?
உன்புன் னகைசெய்யும் ஊறு!
கிள்ளத்தான் தோணும்; கிளுகிளுப்புக்
காணும்;உடன்
அள்ளத்தான் தோணும்; அதற்காகத் -
துள்ளியெழுந்(து)
அள்ளுவதும் கிள்ளுவதும் ஆகாதே நாகரீகம்;
தள்ளிநின்று கொள்நீ தவிப்பு!
கற்போடு நானுள்ளேன்; கால்கட்டும்
போட்டுள்ளேன்;
கொற்கைமுத் தன்ன'ஒய்ஃப்' கொண்டுள்ளேன்; - மற்றொரு
மாதுதொட மாட்டேன் மனதாலும்; காரிகையே!
தூதுவிட வேண்டாம்போய்த் தூங்கு!
'ஷார்ப்பு'நகை, பெண்ணாய்ச் சமைந்தமுகை
கொண்டேன்;ஓர்
சூர்ப்பனகை தேடேன் சுகத்திற்கு; - கூர்விழியே!
காத்திருந்து ஏமாற கால்கடுத்து நீசோர
பூத்திருந்து நீபொசுங்காய் போ!
கட்டில் எனக்கிருக்கக் கட்டாந் தரையெதற்கு?
தொட்டிலுள்ள போதெதற்குத் தூர்ந்தகுழி? - கட்டிப்பொன்
கைமேல் இருக்கக் களிமண்ணை ஒத்த உன்
மெய்மேலா மோகங்கொள் வேன்!?
கண்ணுளியைக் கொண்டு கருத்தை ஒருங்கமைத்து
மண்ணுளியை யார்தான் வடித்தெடுப்பார்; - பெண்ணலநீ
பேசும் சிலையென்று பேத்தும் கவிதையெனில்
ஏசும் தமிழே எதிர்த்து!
படிதாண்டி நீவரலாம்; பாவலன்நான் வெண்பா
அடிதாண்ட மாட்டேன் அறிவாய்; - அடிபோடி!
வீட்டில் ருசிக்க விருந்திருக்கப் போவேனோ
ரோட்டுக் கடை'டிஷ்'க்கு ரோந்து!?
ரம்பைநூல் விட்டாள் ரகசியமாய்; ஊர்காண
அம்பைநூல் விட்டாள் அவசரமாய்; - 'தொம்'மென்று
வீழாத நான்,நீ விரிக்கும் வலையிலா
பாழாவேன் உள்ளம் பசித்து!?
மேய்ச்சல் நிலம்தேடி மேய்வது உன்இஷ்டம்;
காய்ச்சல் நிலம்நான் கடந்துபோ; - ஏய்பெண்ணே!
காற்சட்டைப் பையிரண்டும் காலி; இலைபாராய்!
மேற்சட்டைப் பையிலொன்று மே!
ஃபேஸ்புக்கில் மேய்வதுன் ஃபேஷன்; உனக்கந்த
ரேஸில் கிடைக்கலாம் ரேஷன்;என்ன - டேஷுக்(கு)
எனைவளைக்கத் தேடுகிறாய்? எத்தனையோ
பேருண்(டு)
உனையணைக்கப் போயங்(கு) உலவு!
'தொழில்'செய்ய ஃபேஸ்புக் தொழில்நுட்பம்
ஏற்ற
வழியெனநீச் சுற்றி வரலாம்; - விழிகளால்
காதல் வலைவீச காமக் கதைபேச
ஏதடி நேரம் எனக்கு?
நாற்பதைத் தொட்டவன்நான்; நப்பாசை
விட்டவன்நான்;
நாற்றிசையில் நற்பேரை நட்டவன்நான்; - தோற்பை
வியப்பையெலாம் விட்டேன் வெகுநாள்முன்; சின்ன
வயசிருக்கும் ஆளை வளை!
சைக்கிளே போதும் சவாரிநான் போக; ரேஸ்
பைக்கெலாம் வேண்டாம் பறக்க;இரு - கைக்கொள்ளாப்
பிஞ்சுமாங் காய்களை பிய்த்துச்
சுவைப்பதற்குப்
பஞ்சமா நாட்டில் பயல்!?
புதன், 12 ஆகஸ்ட், 2026
நடை*சாத்தும் முன்பாக நாடிப்போய்ப் பெட்டிக்
கடைசாத்தும் முன்பாகக் காளி – அடைத்தவெண்
சீரெட்டை வாங்கிச் செருகினாள் தன்வாயில்
நீரெட்டும் கண்ணோடு நின்று! 01
நடை – கோயில் கதவுகள்
நெஞ்சம்புண் ஆன நிலமாளும் மாகாளி
பஞ்சு சிகரெட்டைப் பற்றவைத்தாள்; – கொஞ்சமாய்
வட்டவட்ட வெண்புகையை வாயார விட்டால்தான்
எட்டும் மனஅமைதி என்று! 02
ஆடல் அரசி அகில திராவிட
மாடல் அரசை விழுத்தியவள் – ‘கூடல்ல
கோயில் கருவறை கூண்டெ’ன்று கூவினாள்
வாயில் சிகரெட்டை வைத்து! 03
மாண்ட சமஸ்கிருத மந்திரத்தால் காதிரண்டும்
ஈண்டு செவிடாகி இற்றதென்றாள்; – வேண்டுதலால்
தோள்கள் கனத்ததென்றாள்; தொண்டை அடைத்ததென்றாள்;
தாள்கள் கடுத்ததென்றாள் தாய்! 04
விலாநோகத் தன்னை வெறுந்தோளில் தூக்கி
உலாப்போகும் பக்தர்க்கு உதவத் - தலாஓர்
தகரடப் பாவும் தரஇயலா நோவில்
சிகரெட்டை ஊதுகிறாள் சிட்டு! 05
வெண்சங்கை வாயூத வேண்டியவள் ஊதுகிறாள்
வெண்சுருட்டைத் துன்பகல வேண்டிஅவள்; – நண்பகலில்
நட்டநடு வீதியிலே நான்குபேர் பார்க்கையிலே
வெட்டவெளி யோடுபுகை விட்டு! 06
புண்பட்ட நெஞ்சைப் புகையைவிட்டு ஆட்டென்று
பண்பட்ட மாந்தன் பகர்ந்ததைத்தான் – பெண்ணணங்கு
உண்மை எனநம்பி ஊதுகிறாள் மூவுலக
மண்காக்கும் வேலை மறந்து! 07
சாராயம் உண்ணுகிற சாமியுண்டு; வெண்சுருளை
ஆராய்ந்து பற்றவைத்தாள் அன்னையின்று; – வாராத
பெட்டிக் கடைதேடிப் பேரழகு தேவிவந்த
மட்டில் அதுவாச்சே மால்!* 08
மால் – வணிக வளாகம்.
முகைசூடும் தாயின் நகைசூடும் வாயில்
புகைசூடும் காட்சிப் புதுமை – மிகையாகும்
இந்தச் செயலென்று ஏசுவதும் பேசுவதும்
சிந்தை இலாதார் செயல்! 09
காக்கும் கடவுளுக்கும் காயம்
படும்நெஞ்சில்
ஏக்கம்சின் னேரம் எழும்,இரவுத் - தூக்கம்
தொலையும், கனவு கலையும், இதயம்
குலையும் அணலாய்க் கொதித்து! 10
ரம்போட்டு நெஞ்ச ரணத்தினை ஆற்றஒரு
தம்போட்டால் ஆகும் தவிடுபோடி; – தம்மாத்தூண்டு
அற்ப மனிதரை ஆட்கொண்ட செய்கைகளைப்
பொற்பதத்தாள் கற்றதெங்கே போய்!? 11
ஆளும் இறைவி அறிவிக்கப் போந்ததெல்லாம்
நீளும் உயிர்வாழ்வில் நிம்மதிக்காய் –
நாளும்
அடுப்பூதும் பெண்ணும் அலுப்பகல வேண்டின்
எடுத்தூத லாம்சிகரெட் என்று! 12






