அகரம் அமுதன்
பெண்பார்க்கப் போனாயே போவார்
வருவார்தம்
கண்பார்க்கு மாறுநற் கட்டழகோ
– நண்பா!உன்
எண்ணத்தில் அந்நேரம் ஏற்பட்ட
சிந்தனையை
வெண்பாவில் வைப்பாய் விரைந்து!
வரதன்
போதை விழிகண்டேன் பொற்கலைகள்
கட்டழகில்
பாதை மறந்தேன் பருவமகள்
–பேதையுளம்
மட்டும் புரியா மயக்கத்தில்
ஆழ்த்தியெனைச்
சுட்டாள் அதுவும் சுகம்!
அகரம்
அமுதன்
சுகப்போதை தந்து துயில்மறக்கப்
பண்ணி
அகத்தைக் களவாண் டவளின்
–தகவுரு
மாநிறமோ மால்நிறமோ மங்கை
இதழ்சுவைக்கத்
தேனுறுமோ சொல்க தெளிந்து!
வரதன்
தெரிந்த நிறமெல்லாம் தீயணைத்த
வண்ணம்;
புரியா துழல்கின்றேன் பொன்எண்ணம்
–அறிந்ததைச்
சொல்லத் துடிக்கின்ற சொர்க்கமகள்
கண்பார்த்து
அள்ளத் துடிக்கின்றேன் ஆம்!
2017