பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 10 ஜனவரி, 2014
ஞாயிறு, 8 செப்டம்பர், 2013
காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (8)
உலகின்
எல்லாப் பொருள்களின் நிழலும்
தரையில்
விழுகையில்
உன்
ஒருத்தியின் நிழல்மட்டும்
வானில்
விழுகிறது
அதைத்தான்
இவர்கள்
நிலா
என்கிறார்கள்
சனி, 7 செப்டம்பர், 2013
காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (7)
அப்படி
என்ன
சிரிப்பு
வேண்டிக் கிடக்கிறது?
என்கிறாள்
உன்
அன்னை
உன்னிடம்
சிரிப்பு
வேண்டிக் கிடப்பது
தெரியாமல்…
வெள்ளி, 6 செப்டம்பர், 2013
காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (6)
மனிதனுக்குப் போட்டியாய்
கடவுளே எழுப்பிய
உலக அதிசயம்
நீ
யார்கண்ணும்
பட்டுவிடக்கூடாது
என்று
பிரம்மனே
வைத்த
திருஷ்டிப்
போட்டு
உன்
கன்னத்து மச்சம்
வியாழன், 5 செப்டம்பர், 2013
காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (5)
நீ கோபத்தில் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
ஆயுத சொல்லாகின்றன
நீ ‘ம்’ கொட்டும்போது
வெளிப்படும் மெய்யெழுத்தும்
உயிரெழுத்தாகி விடுகிறது
புதன், 4 செப்டம்பர், 2013
செவ்வாய், 3 செப்டம்பர், 2013
காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (3)
நீ
நகைத்தாய்
நகைப்புக்கே
வியப்பு வந்துவிட்டது
இதற்குமுன்
இத்தனை
அழகாகத் தன்னை யாரும்
பிரதிபலித்ததில்லையே என்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
