செவ்வாய், 24 மார்ச், 2026

டூர்போக லாமா டுடே!

 

பிஞ்சுக்கே ரட்டே! பிரியமுள்ள பேரட்டே!

இஞ்ச்பைஇஞ்ச் நான்ரசிக்கும் ஈரெட்டே! – பஞ்சுள்ள

சீரெட்டே! உன்வண்ணம் டீப்ரெட்டே! நானேறும்

சாரட்டே! வாய்முத்தம் தா! 01

 

வளரிளம் மொட்டே! வழக்கத்தை விட்டே

குளம்பியில் முக்கித்தா குட்டே! – விளம்பர

ஜில்லட்டே! போவதேன் சில்லிட்டே!? என்ராயல்

புல்லட்டே! பஞ்சணை போடு! 02

 

இங்கிலாந்து சாக்லெட்டே! எம்பியாடும் பேஸ்கட்டே!

பெங்களூர் தக்காளி ஃபேஸ்கட்டே! – அங்கிள்என்

டார்கெட்டே! டாலடிக்கும் டார்ச்லைட்டே! பள்ளியறை

டூர்போக லாமா டுடே! 03

 

ரைபிளுக்குள் தோட்டா ரவையிடுதல் போலவே

பைபிளுக்குள் கீதையைப் பாய்ச்சுவோம்; - வைப்இலங்கும்

பஞ்சாட் சரத்தால் பரம பிதாவுக்கு

சஞ்சாயம் செய்வோம் ஜபம்! 04

 

நங்கைநீ என்னேஞ்சல்; நானாடும் பொன்னூஞ்சல்;

கங்குலிலும் தீர்த்துவைத்தாய் கண்பூஞ்சல்; - மங்கையுடல்

பொன்மஞ்சள்; பஞ்சணையில் பூங்கொஞ்சல்;  கிட்டியதா

என்னஞ்சல் பூவை இடத்து!? 05

 

நான்தானுன் உள்ளாடை; நாயகியென் வெள்ளாடை;

ஆன்மநெஞ்சிற் கம்மணமே அல்லாடை; – ஒன்றுபட்டு

மென்றுதின்போம் மல்லாட்டை; மேய்த்திடுவோம் வெள்ளாட்டை;

இன்றிரவு என்னோ டிரு! 06

 

நெஞ்சத்தை ராபரி செய்தாயே பைங்கிளி;

மஞ்சத்தில் கார்த்திகையும் மார்கழி; – வஞ்சிக்குத்

தந்திடுவேன் வாய்வழி சாறுள்ள பூங்கழி;

சுந்தரிக்கு ரெட்டைச் சுழி! 07

 

இலக்கணம் மாறா இனிய சிரிப்பில்

பலக்கணம் வானில் பறந்தேன்; – மலக்குடலும்

பூமணம் வீசிகிற பூவையே! உன்னாலென்

கோமணம் ஆடுதடி கூத்து! 08




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக