ஞாயிறு, 29 மார்ச், 2026

 

தேர்வில் ஜெயித்தவன்நான்; செண்டம் அடித்தவன்நான்;

கூர்த்த அறிவுமிக‍க் கொண்டவன்நான்; – பார்வையில்நீ

என்னென்று கேட்கும் எளியவினா வுக்குவிடை

இன்னும் அறிந்தில்லேன் இங்கு!

 

தேர்வில் ஜெயிப்பவன்நான்; செண்டம் அடிப்பவன்நான்;

நேர்நிறையின் தொண்டை நெரிப்பவன்நான்; – பார்வையில்நீ

என்னென்று கேட்கும் எளியவினா வுக்குவிடை

இன்னும் அறிந்தில்லேன் இங்கு!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக