கொஞ்சம் சிரிக்கின்றாள் நெஞ்சம் பறிக்கின்றாள்
மஞ்சம் அழைக்கின்றாள் மாது!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
கட்டுமரக் கூற்று!
கியூட்டாகச்
சிரிக்கும் பில்கேட்ஸ்,
கிறங்கடிக் கின்ற
ஐன்ஸ்டின்,
நியூட்டனொடு
ஓருசந் திப்பை
நிகழ்த்திநான்
டைட்டில் பார்க்கை
பியூட்டியாய்த்
தமிழ கத்தில்
பெரிதாகத்
திறத்தல் ஒன்றே
டியூட்டியாய்ச்
செய்ய வேண்டி
டீலிங்கை அன்றே
போட்டேன்!
ஈர்ப்புவிசை
பற்றி நியூட்டன்
எடுத்துரைத்த
தாரால்? ஐன்ஸ்டின்
பார்நடுங்கும்
அணுவின் குண்டைப்
பண்ணியது யாரால்? பில்கேட்ஸ்
நேர்வந்து மைக்ரோ
சாஃப்டை
நிறுவியது யாரால்? என்றன்
கூர்மதியில்
விளைந்த தைநான்
கூறியதால் விளந்த
தன்றோ!?
நானின்றி அணுவும்
இங்கே
நகராது; கண்ண சைத்தால்
வானின்று மழையும்
கூட
வாராது; கைய சைத்தால்
தீனியை ஆவும்
கன்றும்
தின்னாது; பூமிப் பந்தின்
ஆணிவேர் நானே
அஃதை
அறிந்தவன் உடன்பி
றப்பே!
சாரே சர்க்காரே!
வங்கிமே லாளரே!
வானளவதி காரரே!
தங்க மனம்படைச்ச
சாரே! சர்க்காரே!
அக்கா குருவிபோல்
அன்றாடம் நான்பாடும்
அக்கா புராணம்கேட்(டு)
அலுத்தலுத்துக் கொள்பவரே!
சொக்கா கசங்காம
சோலிபாக்கும் படிச்சவரே!
தொக்கா எனைக்கருதித்
துரத்திவிடும் தடிச்சவரே!
அருமை குறையா
தரும துரையே!
பெருமை குறையாப்
பெரிய துறையே!
என்னாத்தா போலென்னை
இமைக்காம காத்துவந்த
பொன்னாத்தா எங்கக்கா
புதைகுழிக்குப் போயிட்டா!
மவராசி செத்து
மாதமிரண் டாச்சுது
அவள்வைப்புக் கணக்கில் - சில
ஆயிரங்கள் உள்ளது
பொன்னாத்தா சேத்துவச்ச
பொக்கிஷத்தைத் தாரீரோ?
இன்றேனும் அவள்கதையை
இரண்டுவரி கேளீரோ?
நாலணா துட்டுக்கு
நாளெலாம் வேர்வைசிந்திக்
காலணா சேர்க்க - அக்
காளுண்பாள் பழங்கஞ்சி
நீராகா ரம்என்றால்
நீர்சிரிக்கும்; அப்படி
ஓராகா ரத்துக்கே
உண்டான வெஞ்சனமாய்க்
கார மொளாவைக்
கடிப்பது போல்கடிச்சு
வாரம் முழுசுக்கும்
வச்சிப்பாள் மடிமுடிஞ்சு!
பெருந்துயர வாழ்க்கை
பிச்சுப்பிச்சுப் போட்டதுல
தரித்திரம்சொல் லும்சேலை
தச்சுச்தச்சுப் போட்டதுல...
ஆம்பளைபோல் பொம்பளைக்கும்
அரைமுழம் கோமணமே
பூமியில போதுமுன்னு
பொதுச்சட்டம் போட்டிருந்தா
கிழிசலுக்குச் செலவுசெஞ்ச
காசையுமே சேத்திருப்பா
வையத்தை மூனுமுறை
வாங்கியுமே போட்டிருப்பா
பொத்திப்பொத்திச் சேத்தபணம்
பொணம்தூக்க வாரலையே
கொத்தாக மாலையொன்னு
கொண்டுவந்து போடலையே
முப்பது கும்பிட
முன்னவந்து நிக்கலையே
இப்ப வரைக்கும்
என்கைக்குச் சிக்கலையே
இறவான இடுக்கிலே
எஞ்சியதைச் சேத்துவச்சா
மறவாம மோடிவந்து
மதிப்பிழக்கச் செய்வான்னு
வங்கியில் போட்டவள்
மாண்டு மடிச்சபின்னே
இங்கெடுக்க ஆகலையே...
எம்பேச்சு மேவலையே...
செத்தவளைக் கூட்டிவந்தால்
சேமிப்பைத் தருவோம்னு
ஒத்த வரியில்பதில்
உகுக்கும் மவராசா!
ஏழை வயித்துக்குள்
இறைப்பையை வைத்தவனை
பாழை வயித்துக்கள்
பசிவைத்துத் தைத்தவனை
இந்தப் பணத்தைவச்சே
ஏன்னுநான் கேட்கோணும்
அந்தப் பசியைஅவன்
அகப்பையில் வைக்கோணும்
குட்டிச் சுவத்துக்குக்
கூரையொன்னு போடோணும்
எட்டு மொழத்துக்கு
இடுப்புவேட்டி வாங்கோணும்
இறப்புச் சான்றிதழ்
எடுக்கப் பணம்வேணும்
இதற்கேனும் சிலநூறு
எனக்குநீர் தரவேணும்
பனையளவு இங்குள்ள
பணங்காசைத் தரவேணாம்...
தினையளவு எம்காசைத்
திருப்பித் தரவேணாம்?
சட்டையில்லா என்னைச்
சட்டைசெய் யாமல்
சட்டமே பேசுகிற
சாரே! சபையோரே!
இருங்கடா இருங்க - அவ
எலும்புக்கூ டெடுத்துவரேன்
துரும்பாக் கருதுமுங்கள்
தூக்கம் கலைக்கவரேன்!
எத்தனை நூல்கற்றாய்
மோடி -
சௌகிதார் வந்தி ருக்கேன்;
சகஜமாய்ப் பழகும் தம்பி!
சௌக்யமா? மனதில் ஏதும்
சலனமா? பேர்தான் என்ன
கௌசிக்கா? மனதில் என்ன
‘லவ்சிக்’கா? உள்ள வற்றைக்
கௌரவம் விட்டு விஸ்வ
குருவிடம் சொலமாட் டாயா?
கடைக்காரன் -
சிந்தூர்போர் போல்வி ரைந்து
சீக்கிரம் முடிப்ப தற்கு
சிந்தையிலே ஊறுங் காதல்
சிக்கலென்ன சிறுசா? மோடி!
எந்தவூர் ஆளு நீங்க?
என்னவாங் கிடவந் தீங்க?
கந்துக்கே கடையைப் போட்டேன்
காசீந்து வாங்கிக் கோங்க!
டிரம்ப் கூற்று!
அழகான பெண்ணை எல்லாம்
அணைக்கத்தான் வேண்டும் அன்றிக்
குழிதோண்டி புதைக்கும் எண்ணம்
கூடாது; மலர்மஞ் சத்தில்
பழகாத வித்தை யெல்லாம்
பழகத்தான் வேண்டும் அன்றிப்
பழிதீர்த்துக் கொள்ளும் எண்ணம்
பரவிடல் முறையா காது!
அப்பனே! ஈரான் தேசம்
ஆள்வோனே! செயற்கை யான
ஒப்பனை தேவை இல்லா
ஒண்டொடி எண்ம ரையும்
இப்பவே விடுத லைசெய்!
இல்லாது போனால் போரில்
துப்புற வாக உன்னைத்
துடைத்தழித் திடுவேன் நானே!
சுடலை -
லிக்கரை விற்றுக் காசை
லவட்டியும், குடிமக் கள்தம்
நிக்கரை உருவி மானம்
நிம்மதி இழக்கச் செய்தும்,
டக்கராய் வாழும் இந்த
டாடியின் தாகம் தீர்க்கச்
சக்கரை இலாக்க ருப்பஞ்
சாறுபிழிந் தீவாய் தாத்தா!
வியாபாரி -
என்னண்ணன் செட்டு நீங்க!
என்னையா தாத்தான் றீங்க?
நன்மையே செய்யா நீங்க
நாடாள ஏன்வ றீங்க?
கண்ணியமாச் சொல்றேன் எந்தன்
கடைப்பக்கம் வாரா தீங்க
புண்ணியமாப் போகும் நாடு
புலரட்டும் வீடு போங்க!
வெட்டொன்று துண்டிரண்டு விள்!
‘என்னுள் எழுங்காதல் என்னை விழுங்குதல்போல்
உன்னுள்தோன் றிற்றா உனைவிழுங்க?’ – என்பதனைச்
சட்டென்று சொல்லத் தடுமாறும் காரிகையே!
வெட்டொன்று துண்டிரண்டு விள்!
எம்மாம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்
சும்மானாச் சும்பதில் சொன்னாயா? – அம்மாடி!
ஆக்கினைகள் செய்தாயா? ஆறப் பொறுக்கலையே
ஆக்கப் பொறுத்த அகம்!
ஒவ்வொரு நாளுமே ஓர்யுகமாய்ப் போகிறது;
செவ்விழியாட் கெவ்வாறு செல்கிறது? – இவ்விவரம்
பித்துப் பிடித்தவென்முன் பெண்பேதை
சொல்லாக்கால்
செத்துத் தொலையலாம் ச்சே!
யானை பிடிக்க அகலமாய் ஆழ்பள்ளம்
கானை அடைந்து கடைந்தாற்போல் – தானைப்
படைகொண்டு வந்திப் பயலைப் பிடிக்கக்
குடைந்தாயோ கன்னக் குழி!?
பூவுன்னைப் பார்த்தவுடன் புல்லரிக்கும்; பைந்தமிழ்ப்
பாவுன்னைப் பார்த்தவுடன் பல்லிளிக்கும்; – நாவுதிர்க்கும்
மெல்லிசை நச்சரிக்கும்; மேன்மைகளை
உச்சரிக்கும்;
எல்லிநிலா பொச்சரிக்கும் இன்று!