கோலம் அழகம்மா! கோச்சிட்டுப் போலாமா?
ஞாலம் பொறுக்குமா ஞாயமா? - காலம்
ரவிக்கையில் வந்தான் ரவிவர்மா என்று
தவிக்க விடலாமா சாற்று!?
பெண்குழந்தை வேண்டிப் பெரிதாய்
முயன்றபோதும்
மண்ணில் கிடைத்தது மாண்பாக - எண்ணம்
பகைத்து ஆண்மக்கள் பாங்காய் வளர்ந்தே
வகையாய்க் காக்கும் வரவு.
முத்துராக் குக்கு... முதல்வணக்கம்; செய்யாதீர்
சத்தியமாய் வெண்பா தயவுசெய்து; - குத்தமில்லை
என்றாலும் கூட இமியும்* பொருளில்லை;
ஒன்றானும் செய்வீர் உணர்ந்து!
- இமி - இம்மி (இடைக்குறை)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக