பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
வெள்ளி, 21 டிசம்பர், 2012
படப்பா! 60
திட திரவ வாயுப் பொருட்களால்
ஆனது இதயம்
என்றிருந்தேன்
உன்னைப் பார்த்த பின்பே
அறிந்து கோண்டேன்
மாயப் பொருட்களால் ஆனது என்பதை
சனி, 15 டிசம்பர், 2012
படப்பா! 59
நிலவில் பொருள்
எடையிழக்குமாம்
தவறான கண்டுபிடிப்பு
நிலவே!
உன்னை நெருங்கும் போதெல்லாம்
இதயம் கனத்துவிடுகிறதே!
ஞாயிறு, 9 டிசம்பர், 2012
உன்னைத்தான் கேட்கிறேன்!
ஒட்டாதா தமிழர் நாவில்
ஒண்டமிழ்? ஒட்டி
னாலும்
எட்டாதா புகழ்,பேர் என்னும்
இன்னிலை? எட்டி
னாலும்
கொட்டாதா குறையாச் செல்வக்
குவியல்கள்?
கொட்டி னாலும்
கிட்டாதா தமிழர் நாட்டில்
கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?
கூடாதா தமிழர் கூட்டம்?
கூடிப்போர் முரசு
கொட்டக்
கூடாதா? வந்தாண் டேய்க்கும்
கொள்ளையர் கூட்டம் அஞ்சி
ஓடாதா? தமிழர் ஆட்சி
ஓங்காதா? அதனை என்பா
பாடாதா? பாடும் காலம்
பக்கத்தில் வந்தி
டாதா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)