கலியுக
காதல்
கண்ணும்கண்ணும் முட்டிக்கிட்டா
காந்தம்போல ஒட்டிக்கிட்டா
காதலுன்னு சொன்னதெல்லாம்
அப்போ
நேரம்பாத்து நெருங்கிக்கிட்டா
ஓரம்பாத்து ஒதுங்கிக்கிட்டா
காதலுன்னு சொல்லுறாங்க இப்போ!
நாள்முழுக்கப் பார்க்காம
நாலுவார்த்தை பேசாம
நேசம்வச்ச காலமெல்லாம் அப்போ!
காதோடு செல்பேசி
காமம்சொட்டக் கதைபேசி
காலத்தைக் கடத்துறாங்க இப்போ!
நுனிவிரலைத் தொடுவதற்கே
நூறுமுறை யோசிக்கிற
நுட்பத்தோடு காதலிச்சான்
அப்போ!
கொஞ்சிக்கொஞ்சிப் பேசிக்கிட்டு
தொட்டுத்தொட்டுப் பாத்துக்கிட்டு
தொடருவதை காதல்ங்கிறான் இப்போ!
பார்வையால உசுர்பிழைக்க
வார்த்தையால மனம்தழைக்க
மென்முறையில் காதல்செஞ்சான்
அப்போ!
வக்கிரமா படம்புடிச்சி
வஞ்சனையா வசனம்பேசி
வன்முறையாக் காதலிக்கிறான்
இப்போ!
இதயத்துக்குள் பூத்தகாதல்
இல்லேன்னு ஆகிப்புட்டா
இன்னுயிரை மாச்சிக்கிட்டான்
அப்போ!
சம்மத்தைச் சொல்லலேன்னா
காதல்கீதல் பண்ணலேன்னா
கத்தியால குத்தவர்றான் இப்போ!
ஏழையாக இருந்தாலும்
ஏமாத்த மாட்டான்னு
ஏத்துக்கிட்ட காலமெல்லாம்
அப்போ!
ஷாப்பிங்மால் கூட்டிப்போக
வீக்எண்டில் டேட்டிங்போக
வசதியான ஆள்தேடுது இப்போ!
தோதாக ஒருநாளில்
தூதாகத் தோழிபோய்
முழுசாகத் திரும்பிவந்த தப்போ!
சொல்லச்சொன்ன சேதிவிட்டு
கூடிஆடி மோகப்பட்டு
முழுகாமத் திரும்பிவருது
இப்போ!
வயசக்கட்டிப் போட்டுப்புட்டு
மனசவச்சிப் பூட்டிப்புட்டு
கற்புநெறி காத்ததெல்லாம்
அப்போ!
பத்துமுறை ரூமுபோட்டு
ஒத்திகைகள் பார்த்துப்புட்டு
ஓவர்நைட்டில் ஆளமாத்துது
இப்போ!
உடலும்உடலும் எட்டிநின்னு
உயிரும்உயிரும் ஒட்டிநின்னு
உருகிக்காதல் செஞ்சதெல்லாம்
அப்போ
கண்றாவியா உடுத்திக்கிட்டு
கண்டபடி தடவிக்கிடும்
கருமத்தைதான் காதலுன்றான்
இப்போ
உசுரப்பிழியும் கவிதைதீட்டி
மனசதப்பிழியும் வரிகள்ஊட்டி
வலிமைசேர்த்த காதலெல்லாம்
அப்போ!
வக்கிரமா படம்புடிக்கும்
வஞ்சகமா வசனம்பேசும்
வன்முறையைக் காதல்ங்கிறான்
இப்போ!
உசுரஉருவி யெடுத்துநீட்டி
உருகும்மனச அதுலகாட்டி
உண்மையாகக் காதல்செஞ்சான்
அப்போ!
அசிங்கமாகப் படம்புடிச்சி
ஆசிட்முட்டை பயத்தைக்காட்டி
அடாவடி காதல்செய்றான் இப்போ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக