திங்கள், 1 ஜூன், 2026

 


வீஆர் புரௌடுகொத்தூஸ்!

 

வீதியெங்கும் ஒட்டு லித்தோ, வீஆர் புரௌடுகொத்தூஸ்

நாதியென்றோங் கோலார்க்கு நாங்களுண்டித் – தேதிகளில்

தீயசக்தி யானகட்சி ஜென்சி வருகையினால்

தூயசக்தி யானதெனச் சொல்!

 

க‍க்கூஸ் கழுவுதற்கும் காலைப் பிடிப்பதற்கும்

நக்கிப் பிழைப்பதற்கும் நாங்கரெடி – மக்களெல்லாம்

கொத்தூஸ் எனவழைத்தால் கோபம் வராதெமக்குச்

சத்தூசி தான்வ சவு!


 

ஜென்சி திமுக வெண்பா!

 

ஆண்ட திமுக அடம்பிடித்து ஜென்சிகளைத்

தூண்டி இழுக்கத் துணிந்ததுவே – வாண்டுகளின்

மாஸ்அறிந்து கொள்ளா மடமையி னாலடைந்த

லாஸ்அறிந்து கொண்டங்க லாய்த்து!

 

நடிகனின் பின்னால் நடைபோடு வார்தம்

அடிகளைக்கண் ணீரால் அலம்பிப் – பிடித்திழுக்க

ஜென்சியை முன்னொட்டாய்ச் சேர்க்க முனைந்ததெல்லாம்

முன்னேற்றம் அல்ல; முடிவு!

 

கொத்தடிமை என்பதனைக் கொத்தூஸ் எனும்புதுமை

சத்தியமாய்க் காணச் சகிக்கவில்லை; - இத்தகைய

சொல்லால் தனைத்தானே சுட்டல் மடமைஇதைக்

கல்லி எறிதல் கடன்!

 

மூத்த வயதுடைய முட்டாள்கள் சூழ்ந்துளதால்

காத்துமிக வாங்குகிற கட்சியதை – நீத்தார்தம்

பட்டியல் சேர்த்தல் பகுத்தறிவு; ஜென்சிகள்முன்

குட்டிக் கரணமிடல் கூத்து!