புதன், 17 ஜூன், 2026

 

ஏஞ்சல்யார்? என்றே எனைக்கேட்டால் இங்குள்ள

நாஞ்சிலார் என்றேதான் நான்மொழிவேன்; - ஊஞ்சலாய்

அன்னவர் நாவை அழகுதமிழ் ஏற்றாடல்

தென்னவர்க்குச் சொன்னேன் தெளிந்து!

 

வான்போற் புகழும் வசையும் ஒருசேரத்

தான்பெற்ற போதும் தலைக்கனக்கான்; - தேன்பெற்ற

தீஞ்சுவை போலும் சினேகன் திரைப்பாடல்

நாம்சுவைக்கு மாறீந்தான் நன்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக