புதன், 17 ஜூன், 2026

 

நான்பொறந்த ஊர

நான்வளர்ந்த மண்ண

நாலுவரி பாடப்போறேன் கேட்டுக்கோ

சொந்தஊரைப் பற்றி

தப்புக்கணக் கிருந்தா

கையெடுத்து கன்னத்துல போட்டுக்கோ

சந்தனமும் ஈடில்ல பாத்துக்கோ – நீ

சொந்தஊரு மண்ணெடுத்துப் பூசிக்கோ!

 

ஏலேலோ ஏத்தப் பாட்டும்

எசபாடும் குயிலின் பாட்டும்

நாத்துக்கே நடனம் சொல்லி

நடந்துவரும் தென்றல் காத்தும்

கண்ணாடி போன்ற குளத்தில்

பெண்களின் நீர்விளை யாட்டும்

எங்கஊர் இளவட் டங்க

எடுத்தாளும் தமிழா கட்டும்

நீயும் காணவேணும் – கண்டா

அங்கு வாழத்தோனும்

 

தாய்மடிக்கு அடுத்த படியா

சொர்க்கமுன்னா பொறந்த ஊரு

புரியலையா? சிலகா லங்கள்

பொறந்தமண்ண பிரிஞ்சிப் பாரு

பொறந்தவீட்டுப் பெருமை பேசும்

பொம்பளையும் நானும் ஒன்னு

பொறந்தஊர விட்டுப் பிரிஞ்சா

பில்கேட்சே ஆயினும் மண்ணு

சொர்க்கம் கூடபாழு - நீ

சொந்த ஊரில்வாழு

 

 

 

 

 

எங்கஊரு கத்தரிக் காய்க்கு

இணைசொல்ல காயி இருக்கா?

எங்கூரு புழுதி போல

சந்தனமும் மணந்து கெடக்கா?

 

சுற்றிஉண்டு குடிசைகள் நூறு

 

 

 

எங்கஊரு கத்தரிக் காய்க்கு

இணைசொல்ல காயி இருக்கா?

நெய்யொழுக சமச்சிக் கொடுக்க

ரெடியாக தாயி இருக்கா!

 

 

வானுயர்ந்த சோலைகள் இல்ல

மேகம்முட்டும் வீடுகள் இல்ல

திசையளக்கும் தெருக்களும் இல்ல

தேவைக்குமேல் பொருட்களும் இல்ல

பாதிக்குமேல் படிச்சவ னில்ல

பட்டறிவில் இளைச்சவ னில்ல

ஒழைச்சிப்பொழைக்க அறிஞ்ச கூட்டம்

உயரமட்டும் தெரிஞ்ச தில்ல

ஆனா எங்கஊரு

அழகான சிங்கப்பூரு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக