செவ்வாய், 26 மே, 2026

 

வண்டெல்லாம் வாயேஜர்; நண்டெல்லாம் புல்டோசர்;

செண்டெல்லாம் பூங்கொடியின்  சிக்னேச்சர்; - கண்ணெல்லாம்

பிய்த்துயிர் உண்ணும் பிளாக்அண்ட் ஒயிட்ஃப்ளவர்;

மெய்த்திங்கள் சேயுண்ணும் மெஸ்!

 

சொற்பொருள்:-

 

வண்டெல்லாம் வாயேஜர் - அண்டத்தில் கோள்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்டது வாயேஜர் விண்கலம். அதுபோல மலர்களை ஆய்வு செய்யப் புறப்பட்ட கலங்களே வண்டுகள்.

 

நண்டெல்லாம் புல்டோசர் - மனிதர்கள் பள்ளம் பறிக்கப் பயன்படுத்துகிற இயந்திரம் புல்டோசர். நண்டு தனக்கான வளையைத் தோண்ட தானே புல்டோசராகச் செயல்படுகிறது.

 

செண்டெல்லாம் பூங்கொடியின் சிக்னேச்சர் - மலர்களெல்லாம் செடி கொடிகளின் அழகிய கையெழுத்துகள்.

 

கண்ணெல்லாம் பிய்த்துயிர் உண்ணும் பிளாக் அண்ட் ஓயிட் ஃப்ளவர் - பெண்களின் கண்களெல்லாம் ஆண்களின் உயிரை உண்ணும் கறுப்பு வெள்ளை பூக்கள்.

 

மெய்த்திங்கள் சேயுண்ணும் மெய் - இரவில் தோன்றும் நிலவானது பச்சிளம் குழந்தைகளுக்கு நிலாச்சோறு வழங்கும் உணவுக் கூடம்.

 பின்னாலே திட்டுகிற

பேடிகள் வந்தென்றன்
முன்னாலே திட்ட
முடியுமா? - என்முன்னால்
வாண்டுநிகர் தானெந்த
வஸ்தாதும்; நாவினில்
காண்டத்தை மாட்டுங்கள்
கய்ஸ்!

 இலக்கியத் திண்ணையின்

எஸ்.பி.பி; நெஞ்சம்
இலக்கிப் பருகவைக்கும்
என்ஸைன்; - கலக்குகிறான்
பாட்டும் கவிதையுமாய்;
பாவலன் நம் கி.கோ
நாட்டும் தமிழே
நலம்!

சனி, 23 மே, 2026

 

கரப்பான் பூச்சி கழகம் தொடங்கிச்

சிறப்பாய் நாட்டைத் திறம்பட ஆள

முனைந்தது; தூக்கம் மோடி இழந்தார்;

நனைந்தன கண்கள்; நாஸ்தா மறந்தார்;

வழக்கில் தீர்ப்பை வழங்குதல் விட்டே

உழக்குவாய் கொண்ட ஒருநீ திபதி

ஷாத்ஷாத் நமது ஜென்சி பசங்களைக்

காக்ரோச் என்ற கடுப்பில் உதித்ததே

"காக்ரோச் ஜெனதா பார்ட்டி"

நாக்அவுட் செய்து நாட்டை ஆள்கவே!







ஆரா சாவெனும் ஆபாச னின்,டுவிட்

நாராச மானதென நான்சொல்ல வில்லை

உரியோர் உரைக்கிறார்; ஊளையிடு கின்றார்;

மரியாதை யாக மன்னிப்புக்கேள் என்கின்றார்;

கருவாட்டுக் கூடையில் கனகாம் பரவாசம்

வருமா? வராதே! வசைபாடி வளர்ந்தகட்சி

வாயை அடக்குமா? வாரிச் சுருட்டிப்

பாயைக் க‍க்கத்தில் பற்றி நடக்குமா?

முடக்குவா த‍த்தால் முடங்கிய திமுக

இடக்குவா த‍த்தை இனியும் கைவிடுமா?

முடத்தெங் கென்ற முட்டாளைக்

கடத்துக நாடு கதையை முடித்தே!





 

கட்டில் சுகம்கண்டு காசு கொடாதேகல்

மட்டும்தான் கட்டுமர மாண்பாகும்; - சுட்டாலும்

மண்பொன்னாய் மாறிடுமா? மண்மதிப்புக் கூடிடுமா?

புண்வடிக்கு மாசுத்தப் பொன்?




புதன், 20 மே, 2026

 பைத்தியம் முற்றிய

பன்னாடை; காப்பாற்ற
வைத்தியம்செய் தாலும்
வழியில்லை; - தைத்திங்கள்
பொங்கலுக்கு முன்னிவனை
போகியில் போட்டெரிக்கச்
சங்கில் மிதித்தல்
தகும்!

திங்கள், 18 மே, 2026

அப்படியே ஷாக்ஆய்ட்டேன்!

அப்படியே ஷாக்ஆய்ட்டேன்; ஆற‍றிவு வீக்ஆய்ட்டேன்;

தெப்பமாய் வேர்த்துடல் சீக்ஆய்ட்டேன்; – இப்படியே

சித்தமெல்லாம் லாக்ஆய்ட்டேன்; சின்னவிழி லீக்ஆய்ட்டேன்;

ந‍த்திந‍த்தி பேக்ஆய்ட்டேன் நான்!

 

அப்படியே ஷாக்ஆய்ட்டேன்; ஆற‍றிவு வீக்ஆய்ட்டேன்;

தெப்பமாய் வேர்த்துடல் சீக்ஆய்ட்டேன்; – இப்படியோர்

வாய்ப்புக் கிடைத்தும் வழுவ‍விட்ட என்மதியை

நாய்க்குப் படையலிட்டேன் நான்!




திங்கள், 11 மே, 2026

சுடலின் -

 

இந்நாள் முதல்வா!என் இன்னோர் புதல்வா!ஊர்

புந்தியிலே வைத்த புதுத்தலைவா! – வந்தவுடன்

வெள்ளை அறிக்கை வெளியிடத்தான் வேண்டுமா?

தள்ளிவைப்பாய் அவ்வுத் தரவு!

 

விஜய் -

 

கஜானாவில் கொஞ்சமும் காசுபணம் இல்லை

அஜாக்கிரதை யானதுங்கள் ஆட்சி; – மஜாவாகத்

தானிருக்கும் வெள்ளறிக்கை தாக்கல்செய் தாலதற்கே

நானிருக்கேன்; நம்புதெனை நாடு!

 

சுடலின் -

 

பச்சிள கன்று பயமறியா தென்றாற்போல்

இச்சமயம் என்னை எடாவுகிறீர்; – அச்ச மயம்

ஆட்கொள்ளும் அச்சமயம் ஆர்நான் என‍அறிவீர்

நாட்களெண்ணுங் கால்தெரிவேன் நான்!

 

விஜய் -

 

பூச்சாண்டி காட்டுகிற பூமரங்கிள்! ஊழலையே

மூச்சாய் சுவாசித்து மூளைகெட்டீர்; - ஆச்சரியம்

ஆயிரம் காட்டுதற்கே ஆளவந்தேன்; காட்ட‍உங்கள்

வாயிருந்து வாராதோ வாழ்த்து!?






 வாங்கதம்பி வாங்க! வணக்கம்உட் காருங்க!

பூங்கவின்செஞ் சால்வையைப் போர்த்துங்க! – நீங்க‍

தனியாளெல் லாமில்லை; தாத்தாநான் உள்ளேன்;

இனிமேல்நான் உங்க எடுப்பு! 01

 

தின்னப் பொறையும் சில‍எலும்புத் துண்டுகளும்

அன்றாடம் தந்தால் அகம‍கிழ்வேன்; – என்னினிய

தம்பிவிஜய்! நீங்க தருவீங்க; தின்றுநிதம்

கும்பி வளர்ப்பேன் குளிர்ந்து! 02

 

ஓசியில் சோற்றுடன் ஊறுகாய்க் கேமகுடி

வாசிப்பேன் நாளும் வகைவகையாய்; – யாசிக்க

நான்வருமுன் நீங்களே நாடிவந்தீர்; உங்களுக்கு

ஆன்தரும்பால் ஒத்த அகம்! 03

 

பைசா செலவின்றிப் பந்தி கிடைத்ததென்றால்

நைசாய் அமுக்கி நழுவிடுவேன் – சைசான

லெக்பீஸ் கிடைத்ததெனில் ரெண்டுதரம் சாப்பிடுவேன்

தக்லைஃப்என் வாழ்க்கைத் தரம்! 04

 

தம்பி எனைநீங்க தப்பா நினைக்காம

அம்பதோ நூறோ அளிச்சாக்கா – தம்வாங்க

தோதாய் இருக்கும் துளிதுண்டு பீடிக்கும்

போதா வருவாய்இப் போ! 05

 

தீயசக்தி தங்களைத் தீண்டா வணம்பெரியார்

தூயசக்தி காத்துத் துணையிருக்கும்; – காயகல்பம்

சாப்பிட்டுத் தெம்பாகத் தம்பிநன்றாய் ஆளுங்கள்

மூப்புவரை மூலை முடுக்கு! 06

 

வீர மணியென் விசனத்தைத் தீர்த்துவைத்த

காரணத் தாலுங்கள் கால்பணிந்தேன்; – பாரத‍த்தைக்

காக்கவந்த நாயகரே! கஞ்சிக்கோர் நல்வழியைக்

காட்டவந்தீர் வாழ்கவாழ் க! 07




 வெள்ளை அறிக்கை

வெளியிடுக; முன்னாண்டோர்
கொள்ளை அடித்தவற்றைக்
கூறிடுக; – உள்நுழைந்து
சோதனைகள் இட்டிடுக;
தூக்கிவந்து குத்திடுக;
மீதமின்றிப் பற்றிடுக
மீட்டு!



 என்பாக்கள் ஃபன்*பாக்கள்;

ஏகலைவன் கட்டைவிரல்;
பொன்பாக்கள் அல்லஅவை
போதைக்கள்; – வன்பாக்கள்;
துப்பாக்கித் தோட்டாக்கள்;
தோல்வியஞ்சா நோட்டாக்கள்;
கப்பலேறு கின்றஹைக்கூக்
கள்!
ஃபன் - Fun.

 ‘விக்’கைப் பிடித்து

வெளியேற்றி விட்டிந்த
மக்கைக் கொணர்ந்துள்ளே
வைத்துள்ளார்; – ‘விக்’கிற்கும்
மக்கிற்கும் யாதொன்றும்
மாறுபா டில்லைஇதை
மக்கள்தாம் என்றுணர்
வார்?

 ஜோசப் விஜய்:-

கவர்னர்சார்! லெட்டர்
கவரோடு வந்தேன்;
தவறின்றித் டைப்பண்ணித்
தந்தேன்; - கவனமாய்ப்
பார்த்துப் பதவியைப்
பாவப்பட் டீந்தீரேல்
மார்தட்டி ஆள்வேனிம்
மண்!
விஸ்வநாத் அர்லேகர்:-
சொன்னால்கே ளுங்கள்;இத்
தொல்தமிழ் நாடாள
இன்னும் பதின்மர்
இவண்வேண்டும் - முன்வந்தே
ஆதரவை நல்கிட
ஆவலுடன் ஆருள்ளார்
சாதகமாய் இட்டுக்கைச்
சாத்து!?
ஜோசப் விஜய்:-
காங்கிரசில் ஐவர்
கரங்கொடுக்க முன்வந்தார்
வாங்கிவந்தேன் சம்மதித்த
வண்ணமடல் - ஈங்கிவற்றை
ஏற்றுப் பதவி
எனக்களிக்க வேண்டுமெனச்
சாற்றிப் பணிகின்றேன்
தாள்!
விஸ்வநாத் அர்லேகர்:-
இன்னும் அறுவர்
இவண்வேண்டும்; போய்க்கொணர்ந்தால்
முன்னுக்குப் பின்நான்
முரண்படேன்; - அன்றுமக்கே
ஆட்சி செலுத்தும்
அதிகாரம் ஈவேன்தாய்
சாட்சியாய் இஃதுத்
தமம்!
ஜோசப் விஜய்:-
இடதுசா ரிக்கும்
வலதுசா ரிக்கும்
மடலெழுதிக் கோரிக்கை
வைத்தேன்; - குடல்வற்றிச்
சாவதினும் என்பக்கம்
சார்வதுமேல் என்றுவந்தார்
ஆகவதுபா ரீரோ
அடுத்து!?
விஸ்வநாத் அர்லேகர்:-
தம்பி விஜய்!எந்தன்
தார்மீக தர்மத்தை
இம்மியும் மாற
இடமளியேன்; - வெம்பியழ
வேண்டாம்; இனுமிருவர்
வேண்டும்; அழைத்துவந்து
ஆண்டுகொள் ளுங்கள்ஐந்(து)
ஆண்டு!
ஜோசப் விஜய்:-
விசித்திர ஜந்து
வி.சி.க.வைக்கைக் கூப்பி
வசியமொழி ஆயிரம்
வார்த்தேன்; - பிசிறின்றித்
தந்தார்தம் ஆதரவைத்
தாங்கிய நன்மடலை
இந்தாரும் காண்பீர்
எடுத்து!
விஸ்வநாத் அர்லேகர்:-
பஜாரிலே விற்கும்
பதவியென் றெண்ணி
அஜாக்கிரதை யாய்நீங்கள்
அல்லாமல் - மெஜாரிட்டி
காண்பிக்கத் தந்த
கடிதங் களாலும்மை
ஆண்டுகொள்ள விட்டேன்
அழைப்பு!
-அகரம் அமுதன் -



 விஜய் மைண்டு வாய்ஸ்!

நாலாந் தரமான
நற்றமிழ்நாட் டாளுநரை
நாலாந் தரம்பார்க்க
நான்போனால் – ஏலாது
போடா எனவவர்
போய்விட்டார் நான்கிடக்கேன்
பாடாய்ப் பதவிக்கே
பட்டு!

 அச்சனெனக் கூறிவந்தோன்

ஆட்சி பறிபோக
அச்சோ வெனவிங்
கழுதவர்யார்? – மெச்சும்
கலையல்ல ஈதோர்
களை;நாம் வியக்க
மலையல்ல ஈதோர்
மடு!

 ஆண்டாண்டாய் நீங்கள்

அடித்தகொள்ளை பார்த்துத்தான்
வேண்டாம்நீர் என்று
விரட்டிவிட்டார்; – மீண்டுமும்மை
ஓட்டணுமா ஓங்கோலுக்
கொண்டமிழர் தம்பலத்தைக்
காட்டணுமா என்னங்
கடா!?

 சன்னமாய்த் தூறுகிற

சாரலே! என்மனதை
என்னமாய்க் கொள்ளை
இடுகின்றாய்? – நன்னுதலாள்
தீண்டும் குளிர்ச்சியைத்
தேகம் தருகின்றாய்;
யாண்டுமிவ் வாறே
இரு!

 கொளுத்தும் வெயிலின்

கொடுமையில்தப் பிக்கக்
குளுமையைத் தேடுமென்
கூடே! - குளுமைக்குத்
தோப்பிளநீர் கிட்டும்
தொலைவிலில்லாக் காரணத்தால்
சாப்பிடுவோம் தர்பூ
சணி!
குளிர்சா தனப்பெட்டிக்
குள்ளேஓர் ஓரம்
ஒளிந்திந்நாள் வெக்கை
ஒழிப்போம்; - குளித்தாலும்
கொஞ்சமும் சூடு
குறைகின்ற பாடில்லை;
தஞ்சமடை வோமிச்
சணம்!
மோர்குடித்தும் பார்த்தாச்சு;
முற்றும் தயிர்சாதம்
தேர்ந்தெடுத்தும் நண்பகலில்
தின்றாச்சு; - நீர்குடித்தும்
தீர்வில்லை; சூட்டால்
தினம்தொல்லை; ஊத்துகிற
வேர்வையைத் தந்தோம்
விலை!
காட்டில் மரம்கீழ்
கயிற்றுக்கட் டில்போட்டு
நீட்டிப் படுப்பதே
நிம்மதி; - வாட்டி
எடுக்கின்ற வெய்யோன்
எரிச்ச(ல்)தரா வாறு
தடுக்கவழி இல்லா
ததால்!
ஓடைநீர் எங்கேனும்
ஓடாதா? ஓடிப்போய்
ஆடையின்றி நாம்நீந்த
ஆகாதா? – கோடைவெயில்
நுங்குக் கடங்காதா?
நூல்பிடித்து விஞ்ஞானம்
செங்கதிரைத் தீர்க்காதா
தின்று!?

சனி, 9 மே, 2026

 டெல்லிவச்ச ஆப்புக்குத்

தப்பிச் சுடலையார்
கில்லிவச்ச ஆப்பில்
கிழிஞ்சுட்டார்; - சொல்லிவச்சு
காங்கிரஸும் குத்தியதில்
கால்டவுசர் அந்திருச்சு;
போங்கிரஸால் மானமின்று
போச்சு!




 சன்னமாய்த் தூறுகிற

சாரலே! என்மனதை
என்னமாய்க் கொள்ளை
இடுகின்றாய்? – நன்னுதலாள்
தீண்டும் குளிர்ச்சியைத்
தேகம் தருகின்றாய்;
யாண்டுமிவ் வாறே
இரு!

 

அச்சனெனக் கூறிவந்தோன் ஆட்சி பறிபோக

அச்சோ வெனவிங் கழுதவர்யார்? – மெச்சும்

கலையல்ல ஈதோர் களை;நாம் வியக்க

மலையல்ல ஈதோர் மடு!




 


ஆண்டாண்டாய் நீங்கள் அடித்தகொள்ளை பார்த்துத்தான்

வேண்டாம்நீர் என்று விரட்டிவிட்டார் – மீண்டுமும்மை

ஓட்டணுமா ஓங்கோலுக் கொண்டமிழர் தம்பலத்தைக்

காட்டணுமா என்னங் கடா!?