புதன், 17 ஜூன், 2026

 

என் ஊர்

 

நாலாயிரம் பெருமையுண்டு நானெடுத்துச் சொல்ல

சீகூரு போலசொர்க்கம் தேசமெங்கும் இல்ல

வேலுகம்பு வெட்டரிவா நாங்கஎடுப்ப தில்ல

எல்லயில ஐயனாரு காவல்காச்ச சொல்ல…

 

குமரிப் பெண்கள்

குறும்புக் கண்கள்

குறைவில்லாம பெற்றஊர்

காட்டில் வீட்டில்

களத்து மேட்டில்

காதல்பாடம் கற்றஊர்

 

பறவைக் கூட்டம்

இரைகள் தேட

புஞ்சைநஞ்சை கொண்டஊர்

ஊறவு மக்கள்

வந்து போக

திருவிழாக்கள் கண்டஊர்

 

ஈரம் வீரம்

இரண்டும் இங்கே

இம்மியளவும் குறையாஊர்

வசதி கொஞ்சம்

வாய்த்த போதும்

வறுமைக்கோடு மறையாஊர்

 

 

கல்வி கற்ற

கார ணத்தால்

சாதிச்சண்டை மறந்தஊர்

என்னைப் பெற்ற

கார ணத்தால்

இன்னும்கொஞ்சம் சிறந்தஊர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக