தங்குதடை இன்றித் தமிழ்சினி மாவைநீ
வெங்கோபத் தோடு விமர்சித்தாய் -
இங்கினிமேல்
என்ன விளாச இருக்கிறது? மேலுலகம்
சென்றுவா சத்யேந் திரா!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
வண்டெல்லாம் வாயேஜர்; நண்டெல்லாம்
புல்டோசர்;
செண்டெல்லாம் பூங்கொடியின் சிக்னேச்சர்; - கண்ணெல்லாம்
பிய்த்துயிர் உண்ணும் பிளாக்அண்ட்
ஒயிட்ஃப்ளவர்;
மெய்த்திங்கள் சேயுண்ணும் மெஸ்!
சொற்பொருள்:-
வண்டெல்லாம் வாயேஜர் - அண்டத்தில் கோள்களை
ஆய்வு செய்ய அனுப்பப் பட்டது வாயேஜர் விண்கலம். அதுபோல மலர்களை ஆய்வு செய்யப்
புறப்பட்ட கலங்களே வண்டுகள்.
நண்டெல்லாம் புல்டோசர் - மனிதர்கள் பள்ளம்
பறிக்கப் பயன்படுத்துகிற இயந்திரம் புல்டோசர். நண்டு தனக்கான வளையைத் தோண்ட தானே
புல்டோசராகச் செயல்படுகிறது.
செண்டெல்லாம் பூங்கொடியின் சிக்னேச்சர் -
மலர்களெல்லாம் செடி கொடிகளின் அழகிய கையெழுத்துகள்.
கண்ணெல்லாம் பிய்த்துயிர் உண்ணும் பிளாக்
அண்ட் ஓயிட் ஃப்ளவர் - பெண்களின் கண்களெல்லாம் ஆண்களின் உயிரை உண்ணும் கறுப்பு
வெள்ளை பூக்கள்.
மெய்த்திங்கள் சேயுண்ணும் மெய் - இரவில்
தோன்றும் நிலவானது பச்சிளம் குழந்தைகளுக்கு நிலாச்சோறு வழங்கும் உணவுக் கூடம்.
கரப்பான் பூச்சி கழகம் தொடங்கிச்
சிறப்பாய் நாட்டைத் திறம்பட ஆள
முனைந்தது; தூக்கம் மோடி இழந்தார்;
நனைந்தன கண்கள்; நாஸ்தா மறந்தார்;
வழக்கில் தீர்ப்பை வழங்குதல் விட்டே
உழக்குவாய் கொண்ட ஒருநீ திபதி
ஷாத்ஷாத் நமது ஜென்சி பசங்களைக்
காக்ரோச் என்ற கடுப்பில் உதித்ததே
"காக்ரோச் ஜெனதா பார்ட்டி"
நாக்அவுட் செய்து நாட்டை ஆள்கவே!
ஆரா சாவெனும் ஆபாச னின்,டுவிட்
நாராச மானதென நான்சொல்ல வில்லை
உரியோர் உரைக்கிறார்; ஊளையிடு கின்றார்;
மரியாதை யாக மன்னிப்புக்கேள் என்கின்றார்;
கருவாட்டுக் கூடையில் கனகாம் பரவாசம்
வருமா? வராதே! வசைபாடி வளர்ந்தகட்சி
வாயை அடக்குமா? வாரிச் சுருட்டிப்
பாயைக் கக்கத்தில் பற்றி நடக்குமா?
முடக்குவா தத்தால் முடங்கிய திமுக
இடக்குவா தத்தை இனியும் கைவிடுமா?
முடத்தெங் கென்ற முட்டாளைக்
கடத்துக நாடு கதையை முடித்தே!
அப்படியே ஷாக்ஆய்ட்டேன்; ஆறறிவு வீக்ஆய்ட்டேன்;
தெப்பமாய் வேர்த்துடல் சீக்ஆய்ட்டேன்; – இப்படியே
சித்தமெல்லாம் லாக்ஆய்ட்டேன்; சின்னவிழி லீக்ஆய்ட்டேன்;
நத்திநத்தி பேக்ஆய்ட்டேன் நான்!
அப்படியே ஷாக்ஆய்ட்டேன்; ஆறறிவு வீக்ஆய்ட்டேன்;
தெப்பமாய் வேர்த்துடல் சீக்ஆய்ட்டேன்; –
இப்படியோர்
வாய்ப்புக் கிடைத்தும் வழுவவிட்ட
என்மதியை
நாய்க்குப் படையலிட்டேன் நான்!
சுடலின் -
இந்நாள் முதல்வா!என் இன்னோர் புதல்வா!ஊர்
புந்தியிலே வைத்த புதுத்தலைவா! – வந்தவுடன்
வெள்ளை அறிக்கை வெளியிடத்தான் வேண்டுமா?
தள்ளிவைப்பாய் அவ்வுத் தரவு!
விஜய் -
கஜானாவில் கொஞ்சமும் காசுபணம் இல்லை
அஜாக்கிரதை யானதுங்கள் ஆட்சி; – மஜாவாகத்
தானிருக்கும் வெள்ளறிக்கை தாக்கல்செய் தாலதற்கே
நானிருக்கேன்; நம்புதெனை நாடு!
சுடலின் -
பச்சிள கன்று பயமறியா தென்றாற்போல்
இச்சமயம் என்னை எடாவுகிறீர்; – அச்ச மயம்
ஆட்கொள்ளும் அச்சமயம் ஆர்நான் எனஅறிவீர்
நாட்களெண்ணுங் கால்தெரிவேன் நான்!
விஜய் -
பூச்சாண்டி காட்டுகிற பூமரங்கிள்! ஊழலையே
மூச்சாய் சுவாசித்து மூளைகெட்டீர்; - ஆச்சரியம்
ஆயிரம் காட்டுதற்கே ஆளவந்தேன்; காட்டஉங்கள்
வாயிருந்து வாராதோ வாழ்த்து!?
வாங்கதம்பி வாங்க! வணக்கம்உட் காருங்க!
பூங்கவின்செஞ் சால்வையைப் போர்த்துங்க! –
நீங்க
தனியாளெல் லாமில்லை; தாத்தாநான்
உள்ளேன்;
இனிமேல்நான் உங்க எடுப்பு! 01
தின்னப் பொறையும் சிலஎலும்புத்
துண்டுகளும்
அன்றாடம் தந்தால் அகமகிழ்வேன்; – என்னினிய
தம்பிவிஜய்! நீங்க தருவீங்க; தின்றுநிதம்
கும்பி வளர்ப்பேன் குளிர்ந்து! 02
ஓசியில் சோற்றுடன் ஊறுகாய்க் கேமகுடி
வாசிப்பேன் நாளும் வகைவகையாய்; – யாசிக்க
நான்வருமுன் நீங்களே நல்கவந்தீர்; உங்களுக்கு
ஆன்தரும்பால் ஒத்த அகம்! 03
பைசா செலவின்றிப் பந்தி கிடைத்ததென்றால்
நைசாய் அமுக்கி நழுவிடுவேன் – சைசான
லெக்பீஸ் கிடைத்ததெனில் ரெண்டுதரம்
சாப்பிடுவேன்
தக்லைஃப்என் வாழ்க்கைத் தரம்! 04
தம்பி எனைநீங்க தப்பா நினைக்காம
அம்பதோ நூறோ அளிச்சாக்கா – தம்வாங்க
தோதாய் இருக்கும் துளிதுண்டு பீடிக்கும்
போதா வருவாய்இப் போ! 05
தீயசக்தி தங்களைத் தீண்டா வணம்பெரியார்
தூயசக்தி காத்துத் துணையிருக்கும்; – காயகல்பம்
சாப்பிட்டுத் தெம்பாகத் தம்பிநன்றாய்
ஆளுங்கள்
மூப்புவரை மூலை முடுக்கு! 06
வீர மணியென் விசனத்தைத் தீர்த்துவைத்த
காரணத் தாலுங்கள் கால்பணிந்தேன்; – பாரதத்தைக்
காக்கவந்த நாயகரே! கஞ்சிக்கோர் நல்வழியைக்
காட்டவந்தீர் வாழ்கவாழ் க! 07
ஜோசப் விஜய்:-
கொளுத்தும் வெயிலின்