வியாழன், 4 ஜூன், 2026

 

அண்ணன் விக்டர்தாஸ் அவர்களின், 'சக்தி எனத்தொடங்கி சிவம்' எனமுடியும் வெண்பாக்கள்கண்டு வாழ்த்தியொரு வெண்பா நான்செய்ததும் பதிலுக்கவர் ஒருவெண்பா செய்ததும்.... 11-2017

நான் :-

வெண்பா வடிவே! விரசத் தமிழ்செய்யா

ஒண்பா விடிவே! உனதரும் - பண்பாலென்

உள்ளங் கவர்ந்த உயர்கவியே! உன்தமிழ்

வெள்ளங் கலந்தேன் வியந்து!

 

அவர் :-

 

வெண்பா அரங்கில் விளையாடும் வித்தகனே

அன்பால் புகழுகிறாய் ஆகட்டும்-உன்பாவில்

உள்ளம் கரைந்தவன்நான் உள்ளே உறைந்தவன்நான்

துள்ளுகிறேன் உன்அன்பைத் துய்த்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக