என்
ஊர்
என்ஊரைச் சுத்திப் பார்க்கிறேன்
ஏராளம் மாற்றம் பார்க்கிறேன்
ஏரூரும் நிலங்கள் யாவையும்
வீடாச்சே விழிகள் வேர்க்கிறேன்
எருதும் ஏரும் காணல
எதுவும் பேசத் தோனல
கடையில் அரிசி வாங்கி சமைக்கும்
பழக்கம் வந்தது ஊருல
வெள்ளாறு இப்போ வெறிச்சோடி
வாட
வெள்ளாடே! கூறு என்னாச்சு
ஓடை
தேன்குயில் ஏன்தான் கூவல
தென்றல் காற்றும் வீசல
தென்னந் தோப்புக்கு என்ன
ஆச்சு
திருடு போச்சா தெரியல?
எஞ்சோட்டு மான்கள் எங்கேதான்
போச்சு
எல்லார்க்கும் எப்போ கல்யாணம்
ஆச்சு
யாரது சிட்டா பறப்பது
தாவணி யால்முகம் மறைப்பது
குட்டியூண்டா பார்த்த அவளா
குமரிப் பொண்ணா நிற்பது?
என்தந்தை மீசை நரைசூடும்
காட்சி
என்தாயின் தோலில் சுருக்கத்தின்
ஆட்சி
கையும் காலும் ஓடல
கண்ணை இமைகள் மூடல
கடந்த காலம் திரும்ப வருமா
கவலையில் தூக்கம் கூடல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக