ஞாயிறு, 25 அக்டோபர், 2026

 

முத்துநகர் மூச்சுமுட்ட

மொத்தக்காத்தும் நச்சுசொட்ட

குத்துயிரா நாங்க வாழுறோம்! - அட

செத்துச்செத்து நாளும் வீழுறோம்!

 

உப்புநகர் நாசமாச்சு

ஊத்துத்தண்ணீர் பாழாப்போச்சு

நாதியத்த நாங்க நோகுறோம்! – ஆலை

நச்சுக்கக்க நாளும் சாகுறோம்!

 

புள்ளைக்குட்டி நோயில்விழ

பெத்தவங்க பாயில்விழ

நாளை எண்ணி வாயி ஓயிது - எங்க

தொண்டத் தண்ணீர் வத்திக் காயிது!

 

வேலைதந்து கூலிதந்து

வேகமாக நோயைத்தந்து

ஆலைஎமன் ஆட்டம் போடுது! - எங்க

சாவைக்காணக் கூட்டம் கூடுது!

 

தேகத்தில் புத்துவைக்க

சோகத்தில் செத்துவைக்க

சோறுதண்ணீர் உள்ள போகலே! - இதயம்

துடிக்கவில்லை; ஆனால் சாகலே!

 

ஆலைப்புகை ஆளைக்கொல்ல

அந்திவெயில் நாளைக்கொல்ல

எங்கவாழ்வில் இல்லை நிம்மதி! – உசுரை

எடுத்துப்போக எமனே! சம்மதி!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக