திட்டக் குடிதீபக்
செந்தா மரைநெற்றிப்
பொட்டாய் அலங்கரிக்கப்
போகின்றான் –
கட்டில்
சுகந்தின்று பிள்ளை
சுமந்தீன்று மஞ்சன்
அகம்வென்று வாழ்வாள்
அகம்! (1)
பாடும் பறவைகள்
பந்தம் நிலைபெறக்
கூடும் களியெலாம்
கூடலில்; - ஆடும்பொன்
தொட்டில் ஐயிரண்டு
திங்களில்; ஆம்அதைக்
கட்டில் உறுதிசெய்யும்
கண்டு! (2)
கன்னி அவள்பாடக்
கைத்தாளம் போட்டபடி
மன்னனவன் பாட
மலர்மஞ்சப் – பொன்பொழுதில்
கட்டிலும் பாடும்;
கதைஅறிந்த
காரணத்தால்
தொட்டிலும் பாடும்
தொடர்ந்து! (3)
தானாய் அழுமாம்
தளிர்மழலை; போய்அவளை
ஏனாம்? எனக்கேட்பான்
ஏந்தலுமே; - ஆனாலும்
உன்பிள்ளை உன்போலும்;
தம்பிக்(கு) அழுகின்றான்;
என்பாள்தன் எண்ணத்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக