பகடி வெண்பா!
தீட்டிய
பாவில்தான் தீஞ்சுவையோ? இல்லை’மை’
கூட்டிய
பார்வையில்தான் கொங்குளதோ? – கேட்டவுடன்
நேற்றுவரை ‘பா’வென்பாய்;
நேரெதிராய் நாளை’மை’
ஊற்றிய
பார்வையென்பாய் ஓர்ந்து!
சித்திரம்
சின்னச் சிலைஒத்த மேனியினாள்
பத்திரம்
நண்பா!நீ பார்த்துக்கொள்; – அத்திரங்கள்
போடட்டும்
காமன்; புதுமண மக்காள்!நன்(கு)
ஆடட்டும்
கட்டில் அசைந்து!
இடம்மாறும்
பெண்ணால் இடம்மாறும் நெஞ்சம்;
இடம்மாறும்
பெண்ணின் இயைவால்; – இடம்மாறும்
யாவும்
அணைப்பால்;யார் ஆண்பெண்ணென்(று) யார்சொல்வார்?
ஓவும்பூங்
காற்றும் உணர்ந்து!
சந்தியா
காலத்தில் சந்தித்து நீரிருவர்
சந்தியாக்
காலத்தைச் சாடுவிரோ? – சிந்தைநீ
செய்கும்
தமிழ்மொழி தேமொழிக்கீ டில்லையென்று
வைகுமோ
நண்பா!உன் வாய்!?
‘நான்’என்று சொல்லுகின்ற நாள்ஓடிப் போச்சினிமேல்
‘நான்’அன்று ‘நாம்’என்று நாமொழியும்; –
தேன்இன்றுன்
உள்ளங்கை
தன்னில் உணத்தான் தடைபோடும்
உள்ளபடி நாணம்
உயர்ந்து!
நங்கை
தலைசாயும் நாணத்தால் அப்பவும்என்
பங்கைத்தா!
என்றே பகர்வாயோ? –
நுங்குநிகர்
நாவால்
அவள்பேர் நவின்றரு கேஅழைத்துத்
தேவாய்
சுவைக்கையில் தேர்ந்து!
உண்ணா வறளும்; உடலம்
உதறுமப்பா!
உண்ணாய்
பசித்தும் ஒருவாய்; – எண்ணாய்
எதையும்;
அணங்கின் எழில்கண்(டு) உளறும்
அதையும்
இதையும்வாய்; ஆம்!
பாயே இலையாகப்
பாவை உணவாக
நீயோ பசியில்
நெலிவாயே...; – நீயாக
அள்ளித்தான்
உண்ணவும் ஆகாதே; நாணத்தால்
உள்ளம்தான்
நோகும் உடைந்து!
பசிக்கும்
பசும்பால் பழமிருக்கக் கண்டும்
புசிக்கும்
நினைப்பற்றுப் போகும் – புசிக்கின்
புளிக்கும்
உளம்அந்தப் பூவை இடம்மேவிக்
களிக்கும்
தடைகள் கடந்து!
முத்தம்
பிறக்குமிடம் முந்நீரா? செவ்விதழா?
பித்தத்தால்
நீயும் பிதற்றுவாய்; – அத்தானின்
ஐயத்தைப் போக்க
அவளும் வழங்குவாள்
செய்யவாய்
மேலும் சிவந்து!
கச்சிருக்கும்
போதும் கரும்புவில்லோன் அம்பிலொன்று
தச்சிருக்கும்
போதும் தழும்பெறி – மொச்சிருக்கும்
கொங்கை மிகஆட்டம்
கூட்டாதோ உன்னிரண்டு
செங்கை
படத்தான் திரண்டு!?
எட்டிக்காய்
பற்றி இழுத்துச் சுவைக்காமல்
எட்டிக்காய்
என்றே இகழ்வாயோ – எட்டிக்காய்
கின்றமதி
இன்முகத்தாள் கேள்வா அவளிரண்டு
நின்றமுலை
தெங்கிள நீர்!
தப்பெல்லாம்
இங்கே சரியாம் சரி,தப்பாம்
எப்போதோ
நான்கண்ட உண்மையிது – இப்போது
காணத்
துடிப்பவனே காலை அதைக்கேட்டால்
நாணித்
துவள்வாயோ நன்று!?
தோல்வியில்லாத்
தோல்வியிது; தொல்லையில்லாத் தொல்லையிது;
வேள்வியில்லா
வேள்வியிது; வேள்வியந்த –
வேல்விழியாள்;
ஊற்றும்நெய் நீ;உன்னை
ஊற்றின் வரமாக
ஈற்றில்
விளைந்திடும் இன்பு!
அழகான பெண்ணை
அணைப்பாய்; அவளும்
பழகாத பாடம்
பயில்வாள்; –
அழகில்
அழுந்தக்
கடைந்தே அமுதம் எடுக்க
எழுந்து
நடக்கும் இரா!
சேவல் எழுப்பச்
செழுங்கதிரோன் வான்மேவப்
போவதேன் அல்இப்
பொழுதென்றே – ஆவல்
தணியா
மனத்தாய்! தவிதவிப்பாய்; மற்ற
பணியாவும்
போகும் மறந்து!
இராமல் அகலும்
இயல்பால் இரவை
இராவென்று
மாந்தர் இயம்ப – இராமலே
வைகலும் வைகல்
வரக்கண்டு நீநொந்து
வைகலை வைகுவையோ
வந்து!?
மாசறு பொன்னே!
வலம்புரிசங் கே!என்று
பேசரு
பேச்செலாம் பேசியே – நேசமுடன்
மாதிரை ஆகின்ற
மஞ்சப் பொழுதுகளைக்
கோதின்றி
நீஆட்சி கொள்!
சேட்டை
பலசெய்து செந்தா மரைமங்கை
ஏட்டைப்
புரட்டி எழுதுக; –
பாட்டில்
மெதுமுனகல்
மோனை; வியன்கொலுசின் ஓசை
எதுகை;
தழுவல் தளை!
உடலே விறகாய்; உளமே
உலையாய்;
அட்டா விழியே
அனலாய்; –
நடக்கும்
சமையல்
முடிவில் சனிக்கும் மழலை;
உமையே உருவாய்
உரித்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக