வெள்ளி, 3 ஜூலை, 2026

 

A.T. Varatharajan

புக்கும் மரணத்தைப் போய்வர வேற்றுகண்

சொக்குந்தூக் கத்தைச் சுவையாக்கித் -- துக்கக்

களையெடுக்கப் பற்றி கருகியே தொற்றி

விளையாடும் ஆறா விரல்.

 

அகரம் அமுதன்

 

ஊதுவதில் உள்ளம் உவப்பவனே! ஏமனவன்

தூதுவனாம் வெண்சுருள்  தூக்கியெறி; - தீதுணர்ந்தும்

பற்றுவைக்கும் உன்னுள்  பலநாள் மறைந்திருந்து

புற்றுவைக்கு மன்றோ புகை!!!

 

A.T. Varatharajan:-

 

பற்றி எரிந்துப் பழகும் பொழுதெல்லாம்

கற்றதினும் மேலோங்கும் கற்பனைகள் -- கற்றகவிக்

கோவாக்கும் செந்தமிழைக் கோர்த்தே அணிசேர்த்துப்

பாவாக்கும் இந்தப் புகை.

 

அகரம் அமுதன்:-

 

சட்டியில் உள்ளதுதான் சட்டுவத்தில் என்றுணர்ந்து

விட்டொழிக்க வேண்டுமடா வெண்சுருளை; - மட்டின்றிக்

கற்பனைகள் மேவுவதாய்க் காதோரம் பூச்சுற்றல்

விற்பனனில் வேலையோ? விள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக