அகரம் அமுதன்:-
பாவை நடையேஎன் பாநடை; கார்குழற்
காவைப் பொருத்தென் கவித்துவம்; - பூவை
இடைவந் தருளும் இடைச்சொல்; இரண்டு
கடைக்கண் தருமே கரு!
Anbuvalli Thangavelan:-
பெண்பாவைக் காகவோ வெண்பாப் பெருமிதங்கள்?
கண்பாவும் எங்கெங்கும் காப்பியமோ? - நண்பாகேள்
பாவையர்க்காய்ப் பாவைப் படித்தார்
பலபேர்கள்
தேவையா சாமி நீ செப்பு!
அகரம் அமுதன் :-
செப்பென்று கேட்டதனால் செப்புகிறேன்; சாப்பாட்டில்
உப்பின்றி இங்கே உருசியுண்டா? - இப்புவியில்
பெண்ணின்றி இல்லை பெரும்போரும் காவியமும்
உண்மை அறிந்திதை ஒப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக