வெள்ளி, 3 ஜூலை, 2026

23 ஜூன், 2021

 

அகரம் அமுதன்:-

கலைதொட்ட மேனி கவின்இரட்டிப் பாகும்;

அலைதொட்டால் கால்அழுக்(கு) ஆமோ? - சிலையொத்த

சின்னப்பெண் உன்பாதம் சேரக் கிடைத்திடும்

என்னதவம் செய்தால் இடம்!

 

Anbuvalli Thangavelan:-

ஐ‌அந்தச் சேலை‌ அழகா இருக்கிறதே

நெய்தவன் யாரடியோ‌ நீயிந்த‌‌ - நெய்தல்

அலைநின்றால் மீன்நாறும்  அவ்வூரார் பின்னை

விலைபேச மாட்டாரோ‌ வேர்த்து!

 

அகரம் அமுதன்:-

மாலையைச் சூடி மணவாட்டி ஆக்கிவிடக்

காலைமுதல் நிற்கின்றேன் கால்கடுக்க; - வாலைமீன்

போல்விலை பேசிப் பொசுக்கெனயார் வாங்கவந்தார்?

வால்நறுக்கும் என்னுடை வாள்!

 

anbuvalli thangavelan:-

கையில் அழுக்கொட்டாக் கண்மணிகள் நம்மனையில்

வெய்யில் பொறுப்பாரோ வேலப்பா - பையவே

பார்த்தோமா போனோமா என்றிருரந்தால் தொல்லையிலை

யார்க்கும் பொதுப்புத்தி  யீது!

 

அகரம் அமுதன்:-

உண்மையை நன்றாய் உரைத்தீர்கள்; பேரழகுப்

பெண்மை நமக்குப்  பெருஞ்சுமையே; - வண்ணமயில்

தேக வலங்காரத் தேவையைத் தீர்ப்பதற்கே

சாகணும் நாமுழைத்துத் தான்!!

 

23 ஜூன், 2021 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக