வெள்ளி, 3 ஜூலை, 2026

14/8/2020

 

அகரம் அமுதன்:-

ஈமெயிலும், செல்ஃபோனும், இன்ஸ்டாக்ராம் வந்தாலும்

பூமயிலே! நெஞ்சம் புகல்வதற்குப் - பூமியிலே

கன்னல் தமிழில் கடிதமிட்டுக் காதலைச்

சொன்னால் கிடைக்கும் சுகம்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஆக்கியதை யெல்லாமும்  ஆறவைக்கும் அக்கடிதம்

தூக்கிப்போம் நேரமெலாம்  தூரமாக; --- மாக்கணிணி

வாய்விட்டுக் காதல்  வரிவிழியால் சொல்லும்முன்

பாய்விரிக்கும் நண்பா  பசிக்கு!

 

அகரம் அமுதன்:-

 

காக்கவைத்துச் சேரும்  கடிதம்போல் பேரவஸ்தை,

ஏக்கம் தரவலதோ இக்கணினி? - தூக்கம்

தொலைக்கவைக்கும்; மேனி இளைக்கவைக்கும்; நெஞ்சை

மலைக்கவைக்கு(ம்) அப்பா மடல்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஊடல் பிரித்தால் உடல்சேருங் கால(ம்)வரை

தேடல் மனத்தீ  தெரியாதா? -- கூடலுக்குத்

தட்டிவிட்ட ஓர்நொடியில்  தாவிக் குறுஞ்செய்தி

ஒட்டவைக்கும் அன்பை  உடன்!

 

அகரம் அமுதன்:-

 

குறுஞ்செய்தி காதல் குறையாயுள் கொண்ட

வெறுஞ்செய்தி யாகி விலகும்; - நறுஞ்செய்தி

ஏந்திவரும் கண்ணீர் எழுத்துமடற் காதலது

நீந்திவரும் ஊர்ப்பகைமுன் நின்று!

 

ஏடி வரதராஜன்:-

 

சுட்டப் பலகாரஞ்  சூடாறும் முன்இணையம்

பட்டென்று செய்திப்  பகர்ந்துவிடும் -- கெட்டமடல்

ஊர்விட்டூர் சுற்றி  உனைநாடும் முன்நாறி

நீர்விட்டுப் போகும்  நினை!

 

அகரம் அமுதன்:-

 

காத்திருத்தல் இன்பம்; கடிதம் வரும் வரையில்

வேர்த்திருத்தல் இன்பம் விழியோரம்; - பூத்தொடுத்தாற்

பொல்எழுத்துக் கோர்த்த  புதுமடல் கைசேரக்

அகரம் அமுதன்:-

ஈமெயிலும், செல்ஃபோனும், இன்ஸ்டாக்ராம் வந்தாலும்

பூமயிலே! நெஞ்சம் புகல்வதற்குப் - பூமியிலே

கன்னல் தமிழில் கடிதமிட்டுக் காதலைச்

சொன்னால் கிடைக்கும் சுகம்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஆக்கியதை யெல்லாமும்  ஆறவைக்கும் அக்கடிதம்

தூக்கிப்போம் நேரமெலாம்  தூரமாக; --- மாக்கணிணி

வாய்விட்டுக் காதல்  வரிவிழியால் சொல்லும்முன்

பாய்விரிக்கும் நண்பா  பசிக்கு!

 

அகரம் அமுதன்:-

 

காக்கவைத்துச் சேரும்  கடிதம்போல் பேரவஸ்தை,

ஏக்கம் தரவலதோ இக்கணினி? - தூக்கம்

தொலைக்கவைக்கும்; மேனி இளைக்கவைக்கும்; நெஞ்சை

மலைக்கவைக்கு(ம்) அப்பா மடல்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஊடல் பிரித்தால் உடல்சேருங் கால(ம்)வரை

தேடல் மனத்தீ  தெரியாதா? -- கூடலுக்குத்

தட்டிவிட்ட ஓர்நொடியில்  தாவிக் குறுஞ்செய்தி

ஒட்டவைக்கும் அன்பை  உடன்!

 

அகரம் அமுதன்:-

 

குறுஞ்செய்தி காதல் குறையாயுள் கொண்ட

வெறுஞ்செய்தி யாகி விலகும்; - நறுஞ்செய்தி

ஏந்திவரும் கண்ணீர் எழுத்துமடற் காதலது

நீந்திவரும் ஊர்ப்பகைமுன் நின்று!

 

ஏடி வரதராஜன்:-

 

சுட்டப் பலகாரஞ்  சூடாறும் முன்இணையம்

பட்டென்று செய்திப்  பகர்ந்துவிடும் -- கெட்டமடல்

ஊர்விட்டூர் சுற்றி  உனைநாடும் முன்நாறி

நீர்விட்டுப் போகும்  நினை!

 

அகரம் அமுதன்:-

 

காத்திருத்தல் இன்பம்; கடிதம் வரும் வரையில்

வேர்த்திருத்தல் இன்பம் விழியோரம்; - பூத்தொடுத்தாற்

பொல்எழுத்துக் கோர்த்த  புதுமடல் கைசேரக்

கால்நிற்கு மோதரையில் காண்!

 

ஏடி வரதராஜன்:-

 

போகும் குரல்செய்தி  பொங்கவைக்கும் நெஞ்சத்தை;

ஆகுமோ காகிதஞ்சேர் அஞ்சலினால்? --- வேகும்

மனத்தை உடனணைத்தல் மாண்பு; கடிதம்

கனத்தைக் கொடுக்கின்ற  கல்!

 

அகரம் அமுதன்:-

 

கோர்வையாய் நான்கு சொல் கூறவும் ஆகாமல்

பார்வையால் பேசப் பயன்தெரியும்; - ஊர்க்கதைகள்

அல்லெல்லாம் கூடி அளக்கின்ற உங்களது

'செல்'லாலே காதெல்லாம் சீழ்!

 

ஏடி வரதராஜன்:-

 

ஊர்க்கதைகள் அன்றி  உலகக் கதையெல்லாம்

வார்க்கும்"செல் பேசி வகைவகையாய்ப்; --- பார்க்கின்ற

கண்ணோ(டு) உருகண்டும், கால்நடந்தும், பேசுதற்கு

உன்னாலும் ஆமோ உரை?

 

அகரம் அமுதன்:-

 

ஆன்லைனில் காதல் அலப்பறைகள் எல்லாமும்

வீண்வினையில் தானே முடிகிறது; - நான் சொல்லும்

காகிதத் தூதுவிடு காதலே கண்ணியத்தைச்

சாகும் வரைகாக்கும் சார்ந்து!

 

ஏடி வரதராஜன்:-

 

எல்லாம் சரியமுதா; இந்த மடல்வரைந்த(து)

உள்ளபடி யாரென்று  உளம்கேட்கும்; -- கள்ளமற

வான்செயற்கைக் கோள்வழியே வாரும் இணையமடல்

நான்தான் எனஉரைக்கும் நன்கு!

 

அகரம் அமுதன்:-

 

ஃபேக்ஐடி பற்றிநான் பேசவா? பேசினால்

லாக்ஆவாய் என்னிடத்தில் லாவகமாய்; - யோக்கியன்போல்

உள்பெட்டி தன்னில் உணர்ச்சியைத் தூண்டுகிற

கள்ளரை நானறிவேன் காண்!

 

ஏடி வரதராஜன்:-

 

எல்லா துறையும் இதுபோல் திருட்டிருக்கும்

இல்லையென நானும் இயம்பவில்லை --- சொல்லக்கேள்

உள்ள தொழில்நுட்பம் உண்மை தனையழகாய்ப்

புள்ளிவைத்துக் காட்டும் புரி!

 

அகரம் அமுதன்:-

 

சாமத்தில் போர்வைக்குள் சாட்டிங்கில் மேய்வதெல்லாம்

காமத்தைத் தூண்டும் கடைசியில்; - பூமெத்தைத்

தூக்கக் கனவோடும் தொட்டுவிடா மற்பேசி

ஏக்கத்தில் வாழ்வ(து) எழில்!

 

ஏடி வரதராஜன்:-

 

சாட்டிங்கில் காதல் சனித்தால் உடன்மனங்கள்

மீட்டிங்கில் கண்டு மிகைந்தினிக்கும் --- லேட்டாகும்

உங்கள் மடல்தான் உளத்தில் வலிகூட்டும்

எங்கள் இணையம் இனிப்பு!

 

அகரம் அமுதன்:-

 

சாட்டிங்கில் காதல் சனித்ததென்றாய்; பின்பந்த

மீட்டிங்கோ டேன்நிறுத்தி விட்டாய் நீ? - டேட்டிங்கும்

போவதைச் சொல்வாய்;  புலனடக்கம் இல்லாமல்

மேய்வதைச் சொல்வாய் விரைந்து!

 

ஏடி வரதராஜன்:-

 

பார்த்துப் பிடித்திருந்தால் பற்றும் இருநெஞ்சும்

ஈர்த்திணைவ தெங்கும் இயல்பாகும் -- சேர்த்துவைக்க

உந்தியுந்தி அஞ்சல் உனையடையும் முன்னாகந்

தந்துவிட்டால் என்ன தவறு?

 

அகரம் அமுதன்:-

 

எண்ணத்தைத் தாளில் எழுதி எடுத்துப் போய்ப்

பெண்ணிடத்தில் நீட்டல் பெரும்பாடு; - பெண்ணவளும்

வாங்குவதா? நீங்குவதா? வாடிநிற்பாள்; இந்த சுகம்

ஆங்கில்லை ஆன்லைனில் ஆம்!

 

ஏடி வரதராஜன்:-

 

வைத்த ஒலியமைப்பில் வந்தால் அழைப்படடா!

தைக்க மலர்க்கணைகள் தாவிவரும் --- கைக்குள்

அதிர்கின்ற செல்பேசி அன்பை உலுக்கி

உதிர்க்குமையா தேன்மழையை உள்!

 

அகரம் அமுதன்:-

 

காணும் கடிதத்தில் கையெழுத்தும் ஓவியமே;

ஆணும் அணங்குமென்சொல் ஆதரிப்பர்; - பேணும்உம்

மென்பேசி தன்னிலிது மிஸ்ஸிங்; மடல்வரைந்து

தன்காதல் சொல்லல் தகவு!

 

ஏடி வரதராஜன்:-

 

ஓவியமாய் அஞ்சல் உயர்ந்திடினுந் தன்படத்தைக்

காவியமாய்க் காட்டும் கவினிணையம்; -- தாவிவரும்

நெஞ்சத்தின் தேவை நிஜம்தான்; அதுதவறின்

கஞ்சம் வடிக்குமையா கண்!

 

அகரம் அமுதன்:-

 

பிரிவின் துயரால் பெருகிவரும் கண்ணீர்

வரியின் சிலவெழுத்தை மாய்க்கும்; - அரியவர்தம்

அன்பின் மிகுதியிது; அங்கில்லை இஃதேபோல்

நின்று நிலைக்கும் நிகழ்வு!

 

ஏடி வரதராஜன்:-

 

தொடுதிரையைப் பார்த்துத் துயர்மறக்கும் காட்சி

விடும்மடலில் எங்கே விவரி? -- கடுங்கோபம்

கொண்டாலும் புண்ணைக் குறுஞ்செய்தி ஆற்றுதல்போல்

உண்டாசொல் அஞ்சலிலே ஓர்ந்து!

 

அகரம் அமுதன்:-

 

மொழிநுட்பம் காட்ட முனைகிறாய்; இந்தத்

தொழில்நுட்பம் தீராத தொல்லை; - எழில்நுட்பம்

எல்லாம் அறிந்தஎங்கள் ஏட்டுமடல் இந்நாளில்

இல்லாமற் செய்த(து) இயைந்து!

 

ஏடி வரதராஜன்:-

 

தொல்லையெல்லாம் இல்லை அமுதா! தொழில்நுட்பம்

எல்லையில்லா சேவை இசைந்தளிக்கும்; --- இல்லையில்லை....

என்முயலின் கால்கள்மூன்(று)  என்றால் உமகினிநான்

என்சொல்லக் கூடும்  இயம்பு?

 

அகரம் அமுதன்:-

 

ஆண்ட்ராய்டு ஃபோனால் அவதிப் படும்இளைஞர்

மீண்டு வரவே விளம்பினேன்; - வேண்டாம்இச்

சாக்கடையே போதுமெனச் சாற்றுகிறாய்; வாசமிக்க

பூக்கடைவேண் டாமென்றால் போ!

 

ஏடி வரதராஜன்:-

 

வரிவரியாய் அஞ்சல்தான் வாழ்வினிமை என்று

புரியாமல் பேசுகிறாய் பொய்யை; --- சரிசரிவா!

பட்டறிவு கொண்டவர்கள் பார்க்கட்டும்; ஆங்கவர்கள்

திட்டமிட்டுச் சொல்வார்கள் தீர்ப்பு!

 

அகரம் அமுதன்:-

வாதத்தை வைத்தோம்; வழக்கை அறிஞர்தம்

பாதத்தில் வைத்தோம் பதிலுக்காய்; - நாத

வடிவான தேவி நலம்புரிவாள்; நீஉன்

பிடிவாதம் விட்டுப் பிடி!

 

14/8/2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக