வெள்ளி, 3 ஜூலை, 2026

1 ஜூன், 2021

 

அம்மாவிடம்

இளைய மகள் : --

அக்கா பொறந்ததும்நீ

அப்பாட்ட கேட்டதென்ன?

இக்காலம் ஏதுமில்லா

ஏழைக்குத் -- தக்கபடி

நான்பெத்த(து) ஒண்ணு

நமக்கின்னும் வேணுன்னா

ஆண்பிள்ளை கேட்டியா

அன்று?

அம்மா ; ---

ஒண்ணுமே கேக்கலம்மா;

ஓஞ்சி களச்சிவந்தேன்

கண்ணுரெண்டும் மூடி

களைப்பாறி --- தண்ணியில

நின்னு குளிச்சபடி

நீலவண்ணப் பூபோட்டத்

துண்டுதான் கேட்டேன்

தொறந்து!

====

அப்பாவிடம் மகள்!

கேட்டதைத் தாராமல்

கேட்காத வேறோன்றை

நீட்டல்தான் அப்பாஉன்

நேர்மையோ? - காட்டியஉன்

அன்பிற்குப் பாவம்என்

அன்னையன்றோ அல்லலுற்றாள்!

உன்பதில்தான் என்ன?

உரை!

பாவப்பட்ட அப்பா!

துண்டெடுத்துப் போனயென்ன

சும்மான்னு விட்டாளா?

கண்டிழுத்தா என்விரலக்

கையோட - "துண்டெடுத்து

நீயே துவட்டுன்னா(ள்);

நீயே உடுத்துன்னா(ள்);

வாயேன்"னா(ள்) வீழ்ந்தேனம்

மா!

முன்னிரு வெண்பா - வரதன்.

பின்னிரு வெண்பா - அமுதன்.

1 ஜூன், 2021 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக