வரதன்:-
நாட்டுமுட்ட வாங்கிவந்து நாலஞ்சி
ஒடச்சித்தார்
ரோட்டுமேல ஆம்லேட்டே போட்டுடலாம் -- வீட்டுலையே
ஒண்ணுக்கும் போகாம உக்காந்து இருக்கேனே
என்னத்தச் சொல்ல இத.
அமுதன்:-
'ஒக்காளி!' புங்கமரம் ஒன்னுரெண்டு
நட்டுருந்தா
முக்காலி போட்டுநெழல் முன்னமரும்; - ஒக்காந்து
கோட வெயிலுக்குக் குட்டி ஒறக்கத்தப்
போடக் கழியும் பொழுது!
வரதன்:-
குட்டி ஒறக்கமுன்னு கூப்பிட்டு சொல்லிட்ட
எட்டியெட்டிப் பாத்தேன் எழிலமுதா
--ஒட்டியென்ன
முட்டி ஒறக்கந்தான் முன்வருது; நீசொன்னக்
குட்டி வரலையேப்பா கூறு?
அமுதன்:-
குட்டியைக் கேட்கின்றாய் கொண்டு
வருகின்றேன்
நட்புக்காய்ச் செய்யேனோ நானிதனை? - சட்டெனப்
பாய்புலிக் குட்டியா? பாழ்சிறுத்தைக்
குட்டியா?
வாய்திறந்து சொல்லப்பா வந்து!
வரதன்:-
வேங்கையின் குட்டியொன்று வேண்டும்; அதற்குநான்
பாங்காக நல்லப் பயிற்சிதந்து -- ஆங்காங்கே
சில்லரைக்கு நாட்டைவிற்று சீரழிப்போ
ரைப்பிடித்துக்
கொல்லவைக்க வேண்டும் கொடு.
அமுதன்:-
நிற்பவன் எல்லாம் நிசத்திருடன்; தன்ஓட்டை
விற்பவன் எல்லாம் விசக்கிருமி; - மற்றிதில்
கொல்புலியை ஏவிக் கொலைபுரிந்து ஆவதென்ன?
நல்லவராய் மக்களாதல் நன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக