அகரம் அமுதன்:-
சாறு தனைப்பிழிந்து சட்டி
நிறைச்சிடலாம்
யாரு வரீங்க எனக்குதவ? - கூறிவிட்டேன்
கன்னல் கரும்பில்தான் கைவைக்க
வேண்டும்என்
கன்னத்தில் அல்ல களித்து!
அகரம் அமுதன்:-
என்னப்பா ஏடிவி! எங்கே உனைக்காணும்?
கன்னல் பிழியக் கசக்கிறதா? - சொன்னபணி
செய்யத்தான் தெம்பிலையா? சென்றது வேறெங்கே?
ஐய!நீ எல்லாம்ஓர் ஆள்!
இம்மானுவேல்:-
கரும்பிரண்டை ஒன்றாகக் காணுங்கால் எந்த
எறும்புக்கும் வாராதோ ஈர்ப்பு – நறும்பா
அமுதும் வரதும் அடித்தாடும் ஆட்டம்
எமக்கும் அளிக்காதோ ஏற்பு
அகரம் அமுதன்:-
பிழியவாள் இன்றிப் பெரிதென் துயரம்
விழிநீர் வடித்து வெதும்பும் - பழிசுமந்து
கொண்டானே அந்தக் குசும்பன் வரதனைக்
கண்டா வரச்சொல்லுங் க!
இம்மானுவேல்:-
வரதையா வாங்கையா வாய்ப்பிங்கே முன்னால்
பெரிதையா நம்மமுதர் பெய்தார் – அரிதையா
இக்கரும்பு மீளாதாம் இப்போதே
கைப்பார்ப்பீர்
செக்கெடுத்(து) இவ்விடம் சேர்ந்து!
அகரம் அமுதன்:-
தூதுரைத்த பின்னும் துடித்து வராதவனை
ஏதுரைத்து என்ன? இனியிந்த -
மாதிளைத்த
சேதிகேட்டு மாலையில் சேர வருவானேல்
வீதியில் நிற்கவைப்பேன் வெந்து!
ஜாய் சத்தியா:-
வேகம்ஏன் பெண்ணே? விடுவிடு
கோபத்தைச்
சோகம் தவிர்ப்பாய்நீ சொல்கிறேன் உன்னவரை
எங்கேனும் பார்த்தாலுன் ஏக்கம் தனையுரைத்தே
இங்குவர வைப்பேன் இரு.
அகரம் அமுதன்:-
உள்ள கரும்பை உடனே சுவைத்துவிட்டால்
நல்லதென்ப தாலன்றோ நானழைத்தேன்; - இல்லையெனில்
கன்னலும் காய்ந்துவிடும் கட்டெறும்பும்
மேய்ந்துவிடும்
என்னநான் சொல்ல இனி!
வரதன்:-
நாலஞ்சி பொண்ணிருந்தா நானும் எனக்கொண்ணா
ஆல கரும்போட அளிடுவேன் -- சேலகட்டி
ஒத்தப்பூ வாட்டம் ஒருத்திதானே நிக்கிறா
இத்தன பேரும் எதுக்கு.?
அகரம் அமுதன்:-
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்க;
டேஸ்ட்டா இருக்குமிந்த செங்கரும்பு; - லாஸ்ட்டாநான்
கேட்குறேன் 'சாறு பிழிய வர,இல்ல'
நாட்டிப் பதிலை நட!
அகரம் அமுதன்:-
இருப்ப திருகரும்பு; இங்குள்ளீர் மூவர்;
தருக்கம் எதற்கு? தவிர்ப்பீர்; - ஒருபோட்டி
வைப்பேன் ஜெயிப்பவர் வந்தென் னுடன்கரும்பை
சப்புக்கொட் டித்தினலாம் சார்ந்து!
வரதன்:-
தாருமையா போட்டி தனிச்சொல்லா? ஈற்றடியா?
சீருக்குள் மோக சிலுசிலுப்பா? -- நீருக்குள்
கண்ணைத் திறந்துமுங்கிக் காத்திருக்க
வேண்டுமா
என்னையா போட்டி இயம்பு!
அகரம் அமுதன்:-
விடுகதை சொல்வேன் விடைசொல்ல வேண்டும்
விடுகணை போலும் விரைவாய்; - சடுதியில்
முந்தித் தகுந்தபதில் முன்வைப்போன்
என்னோடு
குந்தி அருந்தலாம் கூழ்!*
கூழ் - கருப்பஞ்சாறு எனக்கொள்க.
அகரம் அமுதன்:-
விடுகதை 1!
ஓடுகாலி உள்ளம் உடன்பட் டிரண்டறக்
கூடுவாள் நித்தம் குறைவின்றி; - ஈடுகொடுத்(து)
ஓர்நாளில் ரெண்டுமுறை உச்சம்காண்
பான்கணவன்
ஆர்இவர்கள் சொல்நீ அறிந்து!
இம்மானுவேல்:-
ஓடுகாலி முள்பெரிதாம் ஒத்திசையும்
முள்சிறிதாம்
ஆடுகளத் தில்முட்டி அன்பாகப் – பாடிப்
படியவைத்துக் கூடுமே பகலிராப் போதில்
கடிகாரம் நல்விடையாய்க் காண்!
சுந்தர ராசன்:-
சுத்துங் கடிகாரம் சுத்திவரும் போததுல
நத்தும் பெருமுள்ளோ நல்மனைவி! -
சுத்திவந்து
பன்னெண்டாம் உச்சமதைப் பத்தும்
சிறுமுள்தான்
கொண்டவனாம் என்றுவிடை கூறு!
அகரம் அமுதன்:-
விடுகதை 2!
வாய்நுழையும்; நன்றாய் வளருமே
கைபோட்டால்;
தேய்த்துத் தணிவர் திரைமறைவில்; - ஓய்வின்றிக்
கஸ்டப்பட் டேநாம் கருத்தாய்
வளர்த்துவைத்தால்
இஸ்டத்துக் கேய்ப்பர்; இவை?
அகரம் அமுதன்:-
நெய்யிட்டாற் போல்நுழையும் நின்"பேர்" பிறர்வாயில்;
கையிட்ட தால்வளரும் "கையெழுத்தே"; - மெய்யாய்ப்
புறம்பேசித் தேய்ப்பர்"பேர்" பூத்த"பேர்"
மொத்தம்
அறத்திரண்டு நிற்பர் அணி!
விளக்கம்:-
பெயரைக் குறிக்கிறது இவ்வெண்பா.
(கையெழுத்தாய் இடுவதும் பெயரைத் தானே)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக