வெள்ளி, 3 ஜூலை, 2026

2 ஆகஸ்ட், 2021

 

அகரம் அமுதன்:-

அப்படிநீ சொல்தாயி! ஆதரவா நில்தாயி!

தப்புண்டா? பெண்மேல் தவறுண்டா? - தப்பெல்லாம்

ஆணென்ற அந்த அசிங்கத்தின் மேலிருக்க

வீணென்பேன் பெண்மேல் வெறுப்பு!?

 

ஏடி வரதராசன்:-

பாதி திறந்திருக்கு பட்டனும் பிஞ்சிருக்கு

மேதிமோதி சட்டஈரம் முன்னிருக்கு --- ஊதிஊதி

காத்தடிச்சா பாக்கலாம்  கண்டும் ரசிக்கலாம்

ஆத்தாடீ பேச்சப்பார் ஆங்.

 

அகரம் அமுதன்:-

கெட்டயெண்ணம் இல்லன்னா கேவலமாப் பாக்கலன்னா

சட்டயில வந்ததென்ன சங்கடம்? - குட்டையில

ஊறிய மட்டைகளா ஊன்தின்னும் அட்டைகளா

நாறிடும் நீயடக்கு நா!

 

ஆடையில் உண்டா அசிங்கம்? அதகொறச்சி

மேடையில் வந்தா விமர்சனம்செய்; - பீடை

மதியால வந்த வழுவிது; நீயுன்

குதிகாலை வெட்டிக் குறை!

 

ஏடி வரதராசன்:-

ஈற்றடி வேணும்  இனிய தமிழ்வேணும்

சாற்றும்வெண் பாவின்  சரம்வேணும் -- போற்றுதமிழ்

தையலாள் சேலைகட்டித் தாங்கெழிலும் வேண்டாமா

ஹைக்கூ எழுதலாமே ஹாங்.

 

அகரம் அமுதன்:-

பிற்போக்குச் சிந்தனை; பேர்பெற்ற நிந்தனை;

கற்றோரும் கல்லார்இக் காழ்ப்பினை; - அற்பனே!

முற்போக்கிற் குக்கட்டு மூட முடிவினை;

நற்பேரைப் போட்டு நசுக்கு!

 

2 ஆகஸ்ட், 2021  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக