அகரம் அமுதன்:-
ராவா அடிக்கிறியே ராக்காயி! ராத்திரில
கேவாம என்னசெய்யும் கீழ்வயிறு? - 'பூவா'க்கு
வக்கில்லன் னாலும் வகையாச் சரக்கடிச்சிக்
கிக்கேத்த ஏதுடி காசு?
அன்புவள்ளி தங்கவேலன்:-
மாடா ஒழச்ச வலிதீர இப்படித்தான்
தேடணும் என்ற திமிராளர் தேடிக்
கொடுத்த மரபுகளைக் கொண்டாள் கிழவி
அடுத்தென்ன ஆகட்டும் வா
அகரம் அமுதன்:-
அப்டி விடமுடியா(து) ஆமாம்; கிழவனும்
இப்டி அடிச்சே இறந்துட்டான்; - மப்ல
கிழவியும் போய்ட்டா கதைசொல்வ தாரு?
கழிவிரக்கம் பேரனுக்குக் காட்டு!
அன்புவல்லி தங்கவேலன்:-
ஓகோ விடமுடி யாதோ? உலகளந்த
தாகம் இதற்குத் தனியாக - ஆகின்ற
பெண்ணென்றும் ஆணென்றும் பேதம் இருக்கிறதோ
கிண்ணென் றடிக்கும் கிழம்!
அகரம் அமுதன்:-
குடிகெடுக்கும் இந்தக் குடியவிட லேனா
அடிகெடைக்கும் சொல்லிட்டேன் ஆமாம்; - முடிவெடுத்து
வீட்டாண்ட ஒக்காந்து வெத்தலைய மெல்லோணும்
காட்டாண்ட போறவரைக் கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக