ஏடி வரதராஜன்:-
வையத்தில் கோடி வளர்கா வியமிருந்தும்
பொய்யா மொழியே பொருளழகாம் --- மெய்தன்னில்
அட்டியிட்டு லட்சம் அழகிருந்தும்
நான்படிக்கக்
குட்டிமுயல் கள்தான் குறள்.
அமுதன்:-
எட்டிப்புல் மேய எடுத்துவிட்டாள்
போலுமந்தக்
குட்டிமுயல் அங்கே குதிக்கிறதே! -
தொட்டெடுத்து
முத்தக் குளியல் முழுக்காட்ட நான்வரவா?
செத்தநீ கேட்டெனக்குச் செப்பு!
செத்த – சற்று
மெய்ம் மாலன்:-
குட்டி முயலில் மயலா?கொழுத்திருக்கும்
குட்டியது வேண்டாமோ கூறு?
அமுதன்:-
முயலைக் கரம்பற்றி மோகத்தைத் தூண்ட
மயில்விழும் என்றன் மடி!
ஆகஸ்ட் 8 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக